குரு சிஷ்யன்ல நடிச்சது போதும்.. நான் பட்டதும் போதும்… தலையில் அடித்து கொள்ளும் நடிகை சீதா…

எப்போதும் சிரித்த முகத்துடன் அந்த காலத்து இளைஞர்களை தன் அழகின் மூலம் கட்டிபோட்டவர் நடிகை சீதா. இவர் ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாய் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பொதுவாக நேர்மறையான கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். எதிர்மறையான கதாபாத்திரத்தைவிட நேர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதே இவருக்கு எளிமையாக இருந்ததாம். இவர் தனது மலையாள திரைப்படம் ஒன்றில் எதிர்மறையான திரைப்படத்தில் நடித்ததாகவும் ஆனால் அதில் நடிக்க தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

நடிகை ரவளிக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்.. விஜயகாந்த் உதவியால் கிடைத்த சம்பளம்!

இவர் தமிழ் சினிமா இயக்குனரான பார்த்திபனை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை இவர்களுக்கு நீடிக்கவில்லை. இவர்கள் இருவரும் பின்பு விவாகரத்தும் செய்து கொண்டனர். பின் வேரொருவரை மணந்த சீதாவிற்கு அந்த திருமணமும் நீடிக்கவில்லை.

இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். புதிய பாதை, மாசுக்கேத்த மகாராசா, அம்மா பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே உருவாக்கினார். அந்த கால இளசுகளை இவரின் அழகின் மூலம் கட்டியும் போட்டார்.

அந்த நடிகையை டம்மியாக்குங்க… ஹீரோக்களையே பயப்பட வைத்த கதாநாயகி இவர் தான்…!

இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் குருசிஷ்யன். இப்படத்தில் இவர் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது. இப்படத்தில் இவர் சற்று கிளாமர் தோற்றத்தில் மாடர்ன் உடையில் நடித்திருப்பார்.

ஆனால் இந்த திரைப்படத்தை பார்த்த கே.பாலசந்தர் இவருக்கு போன் செய்து நீ எப்படி இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என திட்டியுள்ளார். அந்த நேரத்தில் சீதா இந்த விஷயத்தை கேட்டு மிகவும் பயந்துள்ளார். ஆனால் தற்போது அந்த திரைப்படத்தை பார்த்தால் தனக்கு சிரிப்புதான் வருவதாகவும் இதெல்லாம் ஒரு கிளாமரா என தோன்றியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சாப்பாடு கேட்டாலே இதான் நிலைமை.. விஜயகாந்த் சந்திச்ச அவமானங்கள்.. சினிமாவில் ஜெயிச்சு ஊரெல்லாம் சாப்பாடு போட்ட தங்க மனசு..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.