அந்த நடிகையை டம்மியாக்குங்க… ஹீரோக்களையே பயப்பட வைத்த கதாநாயகி இவர் தான்…!

குள்ளமாக கருப்பாக பெரிய கண்களுடன் உள்ள நடிகை சரிதா. இவருக்கெல்லாம் நடிக்க வருமான்னு பார்க்கத் தோன்றும் முகம். நடித்தால் அவர் தான் அங்கு கிங். பெரிய பெரிய ஹீரோக்களே இவருடன் நடிக்க பயந்த கலாம் உண்டு. அதைப்பற்றிப் பார்க்கலாமா…

அக்னிசாட்சி படத்தில் ஆண்களை வெறுக்குற கேரக்டர். சிவகுமார் தான் ஜோடி. படத்துல ஒரு சீன். அவர்கள் படத்தைப் படத்துலயே பார்ப்பாரு. அதைப் பார்த்துட்டு கண்ணா பின்னான்னு ஒரு டெப்ரேஷன் மாதிரி ஆகி விட்டாராம் சரிதா. என்னடா வம்பா போச்சுன்னு சிவகுமார் படத்துல பார்க்குறது வேற, நிஜமான ரஜினி வேறன்னு சொல்லி புரிய வைத்தாராம்.

Akni Satchi
Akni Satchi

ரஜினியோட வீட்டுக்கே நேரடியா போயஸ் கார்டனுக்கே கூட்டிட்டுப் போனாராம். அந்தக் காட்சியை அப்படி எடுத்துருப்பாங்க. அங்க வீட்டுல இருந்து ரஜினி வெளியே வந்ததும் நான் தாம்மா ரஜினி. என் வைப்ப கூப்பிடுறேன்னதும் உள்ளே இருந்து லதா வெளியே வருவாங்க. அந்தக்காட்சிக்காகவே அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

பாக்யராஜே சரிதாவைப் பத்தி இப்படி சொன்னாராம். மௌனகீதங்கள் படத்துல நான் உயிரைக் கொடுத்து டயலாக் பேசியிருப்பேன். சரிதாவோட ஒரு ஷாட்ல வந்து கண்ணை மட்டும் குளோசப்ல வச்சிருப்பேன். அதுல இருந்து பொல பொலன்னு தண்ணீ வந்துரும். அதுலயே கிளாப்ஸ் ஆயிடும். மொத்த நடிப்பும் அதுலயே முடிஞ்சிடும்.

ஒரு கட்டத்தில் ஹீரோக்களே பயந்த காலம் உண்டு. ஒரு ஹீரோ சொன்னாராம். இவங்களோட கேரக்டரை எல்லாம் டம்மி பண்ணுங்கன்னு சொல்ல, அந்தப் பிரமாதமான டைரக்டர் அதுக்கு ஒத்துக்கலையாம்.

நீங்க நடிக்கலன்னா கூட பரவாயில்ல. நான் வேற ஹீரோவை வச்சி எடுத்துக்கறேன்னு சொல்ல, இல்ல நான் விளையாட்டுக்கு சொன்னேன்னு பல்டி அடிச்சாராம் அந்த ஹீரோ. இந்த விஷயத்தை அவங்கக்கிட்டக் கொண்டு போயிடாதீங்கன்னும் சொன்னாராம்.

அவரது பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் தமிழை அவ்வளவுத் தெளிவாகப் பேசுற நடிகை சரிதா. 80 காலகட்டங்களில் நதியா, அம்பிகா, ராதா, விஜயசாந்தி. குறிப்பா விஜயசாந்தி பூ ஒன்று புயலானது, அதிரடி போலீஸ், நீயா நானா என்று பல டப்பிங் படங்களில் விஜயசாந்தி பேசுற டயலாக் எல்லாமே சரிதாவோட டயலாக் தான்.

இன்று லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரான்னு சொல்றாங்க. ஆனா ரியல் லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி தான் அப்போ. அப்போ அவரோட வளர்ச்சியில பெரும்பங்காற்றுனது சரிதாவோட வாய்ஸ் தான்.

இவங்க வந்த ரெண்டாவது படத்துலயே காணாமப் போயிடுவாங்கன்னு பல நடிகைகள் நினைச்சாங்க. ஆனா படம் வர வர சக நடிகைகளுக்கே கோபம் வர ஆரம்பிச்சது. உங்க கூட நடிக்க மாட்டேன்னு சொல்வாங்களாம். அப்போ நிறைய பேரு இவரைப் பார்த்து பொறாமைப்பட்டாங்களாம்.

அப்போ பாலசந்தர் சொன்னாராம். உன்னைப் பார்த்து யார் யார்லாம் பொறாமைப்படுறாங்களோ… அப்போ நீ வளர்ந்துக்கிட்டு வாரன்னு அர்த்தம். தொடர்ந்து கவலைப்படாம நடிச்சிக்கிட்டே இருன்னு சொன்னாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.