விதவிதமாய் வித்தியாசமாய் நெக்லஸ் வகைகள்… என்னென்ன நெக்லஸ் இருக்கிறது?

ஆபரணங்கள் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக கழுத்தில் அணியும் நெக்லஸ் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒரு ஆபரணமாகும். பாரம்பரிய உடை அணிந்தாலும் நவயுக உடையாக இருந்தாலும் பெண்கள் விதவிதமாய் நெக்லஸ் அணிவதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டுவர்.

இந்த நெக்லஸ் ஆனது பல்வேறு டிசைன்களில் காலத்திற்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பல வகைகளில் இந்த நெக்லஸ் கண் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு பலரையும் கவர்ந்து வருகிறது. அவற்றுள் சில முக்கிய வகையான நெக்லஸ்களை பற்றி பார்ப்போம்.

istockphoto 1126858679 612x612 1

1. சோக்கர் நெக்லஸ் :

சோக்கர் கழுத்தை ஒட்டி அணியப்படும் ஒரு நெக்லஸ் ஆகும். இந்த நெக்லஸின் நீளம் 14″ முதல் 16″ வரை இருக்கும் கழுத்தின் மேல் பகுதியில் தொண்டை வளைவை சுற்றி அணிந்து கொள்ளும் வகையில் இந்த ஜோக்கர் இருக்கும். பட்டுப்புடவை, லெகங்கா, நீளமான கவுன் போன்ற அனைத்து உடைகளுக்கும் இந்த ஜோக்கர் பொருத்தமாக இருக்கும்.

SRP

2. காலர் நெக்லஸ் :

istockphoto 944588456 612x612 1

காலர் நெக்லஸ் திருமணம் போன்ற விழாக்களுக்கு அணிந்து செல்ல பார்வையாக இருக்கும்.  புடவைக்கு மட்டுமின்றி மாடன் உடைகளுக்கும் காலர் நெக்லஸ் நல்ல தேர்வு. எளிமையான உடையாக இருந்தாலும் அதனுடன் இந்த காலர் நெக்லஸ் ஒன்று அணிந்தாலே நல்ல தோற்றம் தரும்.

3. பல சரங்கள் கொண்ட நெக்லஸ் :

images 3 22

இந்த நெக்லஸில் செயின் சரம் சரமாக தொங்குவது போன்ற அமைப்புடன் இருக்கும். நவ யுக யுவதிகளின் பெரும்பாலான தேர்வு இந்த பல சரங்கள் கொண்ட நெக்லஸ் தான். திருமணம் போன்ற பெரிய விழாக்களுக்கு மிகவும் எடுப்பாக தெரிய இந்த நெக்லஸ் சிறப்பான தேர்வாக அமையும்.

4. பிப் நெக்லஸ் :

images 3 27

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் பொழுது அது குழந்தையின் மேல் சிந்தி விடாமல் இருப்பதற்காக பிப் கட்டுவது உண்டு இந்த நெக்லஸ் ஆனது அதேபோன்ற பிப் வடிவத்துடன் இருப்பதால் இது பிப் நெக்லஸ் என்று அழைக்கப்படுகிறது. கம்பீரத் தோற்றம் தரும் இந்த நெக்லஸ் ஆனது கழுத்து முழுமையையும் நிறைத்து நல்ல பார்வையாக இருக்கும்.

5. பிரின்சஸ் நெக்லஸ் :

istockphoto 1394398192 612x612 1

பிரின்சஸ் நெக்லஸ் ஆனது வி வடிவ கழுத்து உடைய உடைகளுக்கு பொருத்தமாய் இருக்கும். இது ஜோக்கரை போல் கழுத்தை ஒட்டி இல்லாமல் ஆரத்தை போல் மிகவும் இறக்கமாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் இருக்கும். ப்லேசருடன் அணிவதற்கு இந்த பிரின்சஸ் நெக்லஸ் பரிந்துரைக்கப்படும்.

6. பென்டன்ட் நெக்லஸ் :

images 3 26

பென்டன்ட் நெக்லஸ் ஆனது தினமும் அணிவதற்கு ஏற்ற நெக்லஸ் ஆகும். செயினுடன் ஒரு சிறிய பென்டன்ட் இணைந்த வடிவில் எளிமையாகவும் அழகாகவும் தோற்றம் தரக்கூடியது இந்த பெண்டன்ட் நெக்லஸ். காதில் பெரிய அளவில் காதணிகள் அணிந்து கழுத்தில் ஒரு சிறிய பென்டன்ட் அணிவதும் நன்றாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews