தனுசு ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. தனுசு ராசி அன்பர்களே! பெயர்ச்சியின்போது யோகக் காரகர் ராகு பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். ஞானக்காரகரான கேது பகவான் 11 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார்.

தனுசுக்கு 4 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவால் பெரிதளவில் கேடு எதுவும் இல்லை; குரு பகவானின் வீட்டில் இருக்கும் ராகு பகவான் சுப பலன்களைக் கொடுக்கும் ராகு பகவானாக இருப்பார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வேலையானது கிடைக்கப் பெறும். பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றமானது கிடைக்கப் பெறும். மேலும் சம்பள உயர்வு, இட மாற்றம் போன்ற விஷயங்கள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

பழைய வண்டி, வாகனங்களை மாற்றி புது வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலும் வீடு, மனை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வீர்கள்; அட்வான்ஸ் தொகையினைக் கொடுத்து வாங்கும் இடத்தினை உறுதியும் செய்வீர்கள்.

மேலும் கட்டப்பட்டு பாதியில் நிலையில் நின்ற வீடு தற்போது கட்டி முடிக்கப்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை ராகு பகவான் சிறிய அளவில் இருக்கும்போதே சுட்டிக் காட்டும்.

சிறிய அளவில் பிரச்சினைகள் இருக்கும்போதே அதனைக் கவனித்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள்; இல்லையேல் பெரும் செலவுகளுக்கும், பெரிய அளவிலான உடல் தொந்தரவுகளுக்கும் உங்களை ஆளாக்கிவிடும்.

தொழில் வாழ்க்கையினைப் பொறுத்தவரை ஓரளவு நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிப் பாதையினை நோக்கி நீங்கள் திட்டம் தீட்டுவீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை சிறப்பான காலகட்டமாக இருக்கும். படிப்பில் கவனத்துடன் செயல்படுவர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

முதலீடுகளைச் செய்ய ஏற்ற காலகட்டமாக இது இருக்கும்; அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசித்து முதலீடுகள் செய்யுங்கள். பூர்விகச் சொத்துகள் சார்ந்த விஷயங்களின் முடிவுகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வர்; மேலும் உடன் பிறப்புகள் உங்களுக்குப் பல வகைகளில் உதவிகரமாக இருப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews