தனுசு நவம்பர் மாத ராசி பலன் 2023!

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; ராகு- கேது பெயர்ச்சியானது நிகழ்ந்துள்ளது. குரு பகவான் 5 ஆம் இடத்தில் உள்ளார். தனுசு ராசியினைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தில் பல ஆதாயம் தரும் விஷயங்கள் நடக்கப்பெறும்.

இடப் பெயர்ச்சி என்று கொண்டால் நவம்பர் மாத இரண்டாம் பாதியில் 12 ஆம் வீட்டில் செவ்வாய் பகவானுடன் புதன் பகவான்- சூர்ய பகவான் கூட்டணி அமைக்கின்றனர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குரு பகவான் உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் வாரிக் கொடுப்பார். நீங்கள் நினைத்த விஷயங்களை அடையும் வழியைத் தேட ஆரம்பித்து விடுவீர்கள். சனி பகவான் உங்களுக்கு சகாயங்களைச் செய்பவராக இருப்பார். ராகு பகவான் 4 ஆம் இடத்திற்கு வருவதால் பதவி அதிகாரம் கிடைக்கப் பெறும்.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் திட்டங்களைத் தீட்டுவதற்குச் சரியான காலமாகும். நீங்கள் தொழில் அபிவிருத்தி செய்தல், தொழிலை மாற்றுதல், புதுத் தொழில் துவக்குவதல் என எந்தவகையான மாற்றங்களையும் செய்யலாம்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நினைத்த மாற்றங்களை தைரியத்துடன் செய்யலாம். வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கப் பெறும். வாங்கிய பழைய கடன்களைக் குறைப்பீர்கள்; புதிதாகத் திட்டங்களைத் தீட்டி முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையுடன் இருப்பர்; உயர் கல்வி ரீதியாக சிறப்பாகத் தீட்டி சிறப்பாக காரியத்தினை செய்து முடிப்பார்கள்.

கடந்த காலங்களில் நிறைய விஷயங்களால் அவமானத்தை சந்தித்து இருப்பீர்கள்; தற்போது இழந்த விஷயங்களை அடையும் காலமாக நவம்பர் மாதம் உங்களுக்கு இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வீடு, மனை வாங்க நினைத்து இருந்தோர்களுக்கு இது ஏற்ற காலகட்டமாக இருக்கும். குரு பகவான் வலுவடைந்து உள்ளார்; சுக்கிரன் வலுவற்று உள்ளார். திருமண காரியங்களைப் பொறுத்தவரை ஜாதகத்தை தூசி தட்டி எடுத்து தாராளமாக வரன் பார்க்க ஆரம்பிக்கலாம், எதிர்பார்த்த வரன்கள் உங்களைத் தேடி வரும்.

வீடு மாற்றம், இட மாற்றம் போன்ற விஷயங்களைச் செய்யலாம். பிரிந்த உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews