தனுசு மார்கழி மாத ராசி பலன் 2023!

தனுசு ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை நரசிம்மர் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்துவந்தால் வாழ்க்கையில் அனைத்துவிதமான சகாயங்களும் ஏற்படும். உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும், குறிப்பாக வயிறு மற்றும் செரிமானப் பாதைகள் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் பேசும்போது மிகக் கவனமாகச் செயல்படுதல் வேண்டும். தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் கூடாது.

உங்கள் குடும்ப வாழ்க்கையில் யாருடைய தலையீடும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அதேபோல் நீங்கள் யாருடைய குடும்ப வாழ்க்கையிலும் தலையீடு செய்யாதீர்கள்.

சிறிதளவில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசினாலும் பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு ஆளாவீர்கள். பெரிய அளவிலான மனச் சங்கடங்கள், மனக் கஷ்டங்களைச் சந்திப்பீர்கள்; அதனால் பொறுமையினையும் நிதானத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்படுங்கள்.

வீடு கட்டி வந்த நிலையில் தற்போது அதனைக் கட்டி முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். ஏற்கனவே கடனுதவிக்காக பல இடங்களில் விண்ணப்பித்து இருப்பீர்கள்; அவற்றில் தொடர்ந்து இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.

பிள்ளைகளுடன் பணம் சார்ந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடன் பிறப்புகளுக்கும் உங்களுக்கும் சொத்துரீதியிலான பிரச்சினைகள் பெரும் பிளவுகளாக ஏற்பட வாய்ப்புண்டு.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும், இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் மனக் கஷ்டத்திற்கு ஆளாவர்.

சுப காரியங்களில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும், திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்ப்பதுபோல் வரன் அமையாது. மாணவர்கள் கல்வி ரீதியாக மந்தநிலையிலேயே காணப்படுவர். பிள்ளைகள் மீது கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.

பூர்விகச் சொத்துப் பிரச்சினைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுதல் நல்லது. இல்லையேல் கோர்ட், வழக்கு என்று பெரிய அளவில் பிரச்சினைகள் பூதாகரமாகும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews