தனுசு ஜூலை மாத ராசி பலன் 2023!

தனுசு ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை ஜூலை முற்பாதியில் கிரகங்களின் நிலையானது உங்களுக்குச் சாதகமாக உள்ளது.

7ஆம் இடத்தில் சூர்ய பகவான் – புதன், 9ஆம் இடத்தில் சுக்கிரன்- செவ்வாய், 5ஆம் இடத்தில் குரு பகவான், 3ஆம் இடத்தில் சனி பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், நினைத்ததை அடைவீர்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை சாதகமான காலமாக இருக்கும். பெரிய அளவில் கனவு வேலை கிடைக்காவிட்டாலும், தற்போதைய நிலைமையினைச் சமாளிக்கும் வகையில் ஒரு நல்ல வேலை கிடைக்கப் பெறும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும். குடும்ப வாழ்க்கையினப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக பிரிந்திருந்த கணவன்- மனைவி இடையே புரிதல் ஏற்படும்.

சொத்துரீதியாக இருந்த பிரச்சினைகள் சரியாகும், கோர்ட் சார்ந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பானது கிடைக்கப் பெறும். பிரிந்திருந்த கணவன் வழி உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். வீடு கட்டப்பட்டு இருந்தநிலையில் பாதியிலேயே விட்டு இருப்பீர்கள், தற்போதைக்குத் தேவையான கடன் உதவிகள் கிடைக்கப் பெறும்.

பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதால் உங்கள்மீதான பொறுப்பு அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும். வாங்கிய பழைய கடன் உங்களை நெருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தைரியத்துடன் செயல்படுங்கள்; தன்னம்பிக்கையே உங்களின் பலம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews