தனுசு டிசம்பர் மாத ராசி பலன் 2023!

தனுசு ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை உங்களின் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 12 ஆம் இடத்தில் செவ்வாய் மற்றும் சூர்ய பகவான் இணைந்து இட அமர்வு செய்துள்ளனர்.

ஆட்சி பெற்ற செவ்வாய் பகவான் பெரிதளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது, சூர்ய பகவான் உங்களுக்கு வேலை சார்ந்த அழுத்தங்களைக் கொடுப்பார். மேலும் டிசம்பர் முதல் பாதியில் வேலைப்பளு அதிகரித்து பின் இரண்டாம் பாதியில் வேலைப்பளு குறையும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வேலைசார்ந்து துறை மாற்றம், இட மாற்றம், பதவி உயர்வுரீதியிலான மாற்றங்களைச் செய்வீர்கள். 3 ஆம் இடத்தில் சனி பகவான் இட அமர்வு செய்துள்ளார்; 4 ஆம் இடத்தில் ராகு பகவான் இட அமர்வு செய்துள்ளார்.

வீட்டிற்குள் பல மாற்றங்களை நீங்கள் செய்வீர்கள். நேரத்தையும் பணத்தையும் செலவழித்து நண்பர்களுடனும் சரி குடும்பத்தினர்களுடனும் சரி மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய மாதமாக டிசம்பர் மாதம் இருக்கும்.

தொழில் ரீதியாக சிறு சிறு முதலீடுகளைச் செய்து அபிவிருத்தி போன்ற காரியங்களைச் செய்யலாம். திட்டங்களைத் தீட்டி வையுங்கள்; சூர்ய பகவான் 15 ஆம் தேதி இடப் பெயர்ச்சி செய்தபின் உங்களின் திட்டங்களை நிறைவேற்றுங்கள்.

நினைத்ததை நடத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும் டிசம்பர் மாதம் இருக்கும். திருமண காரியங்கள் என்று கொண்டால் உங்களுக்கேற்ற வரன் அமையப் பெறும். எதிர்பார்த்த வங்கி அல்லது அரசாங்கம் சார்ந்த கடனுதவிகளில் இழுபறி நீடிக்கும். உறவினர்களுடன் பணம் சார்ந்த விஷயங்களால் மனக் கசப்புகள் ஏற்படும்.

குருவின் பார்வையில் சுக்கிரனும் சுக்கிரன் பார்வையில் குரு பகவானும் இட அமர்வு செய்துள்ளனர். தனுசு ராசியினைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு குறித்து சிறப்பான திட்டங்களை வகுக்க ஏற்ற மாதமாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புதன் மீது விழும் குரு பகவானின் பார்வை உங்களை மேலும் புத்திக் கூர்மையாக யோசிக்க வைக்கும். கடந்த கால கசப்புகளை மறப்பதற்கும் நிகழ்கால மகிழ்ச்சியினை அனுபவிப்பதற்கும், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கும் ஏற்ற காலகட்டமாக டிசம்பர் மாதம் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.