தனுசு ஆவணி மாத ராசி பலன் 2023!

தனுசு ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை 5 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார், 9 ஆம் இடத்தில் உள்ள சூர்ய பகவானை குரு பகவான் பார்வையிடுகிறார்.

சனி பகவான் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார். மேலும் குழந்தைகள் பெற்றோர் சொல் கேட்டு நடக்கமாட்டார்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்பத்தின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும்; உடன் பிறப்புகள் இடையே சொத்து ரீதியான பிரச்சினைகள், மனக் கசப்புகள் அதிகரிக்கும். தாய் மற்றும் தாய்வழி சொந்தங்களால் அனுகூலங்கள் ஏற்படும். நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நற் செய்தி உங்களைத் தேடி வரும்.

பூர்விகச் சொத்துரீதியான பிரச்சினைகள் குறைந்து, ஓரளவு சமாதானத்திற்கு வரும். 5 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் இருந்து ராகு பகவானை 8 ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.

சொந்த ஊரில் இருக்கும் பழைய வீட்டினைப் புதுப்பித்தல், புது வீடு கட்டுதல் என்பது போன்ற முயற்சியில் களம் இறங்குவீர்கள். 7 ஆம் இடத்து அதிபதியான புதன் பகவான் 9 ஆம் இடத்தில் உள்ளார். உங்கள் வாழ்க்கைத் துணையால் யோக பாக்கியங்கள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தட்டிப் போன வரன்களும் உங்களைத் தேடி வரும்.

நண்பர்களால் பல வகைகளிலும் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்துக் கொண்டால் சிறந்த கூட்டாளர்கள் அமைவர். மேலும் கூட்டுத் தொழிலில் பெரிய அளவில் லாபத்தினைப் பார்ப்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews