தனுசு ஆடி மாத ராசி பலன் 2023!

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் பூர்வ புண்ணிய பலன்கள் மூலம் இதுவரை நடக்காமல் போன நல்ல காரியங்கள் இனி நடந்தேறும். மாற்றங்கள் அதிகம் கொண்ட மாதமாக ஆடி மாதம் இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்படும். தந்தையுடன் வாக்குவாதங்களையும், வீண் பேச்சுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். தந்தையின் உடல் ஆரோக்கியக் குறைபாடு ரீதியாக சிறு சிறு செலவினங்கள் ஏற்படும்.

குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெருமை தேடித் தரும் வகையில் குழந்தைகள் நடந்து கொள்வர். தொழில்ரீதியாக அபிவிருத்தி சார்ந்த முயற்சிகளில் களம் இறங்குவீர்கள். தொழில்ரீதியாக அரசுக் கடன் உதவிகள் கிடைக்கப் பெறும்.

வியாபார ரீதியான முயற்சிகள் செலவுகளை ஏற்படுத்தும்; ஆனால் மற்றொருபுறம் பண வருமானம் மற்றொருபுறம் அதிகமாக இருக்கும். பிரிந்த தாய்வழி உறவினர்கள் ஒன்று சேர்வர். இல்லத்தரசிகள் தங்கநகை சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

நண்பர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் அமைவதோடு திருமண தேதியைக் குறிப்பீர்கள்.

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews