நாலு பக்க டயலாக்.. சமுத்திரகனி அண்ணனை நம்பினேன்.. ஒரே டேக்கில் முடித்து ஏமாத்திட்டார்.. தனுஷ் பகிர்ந்த தகவல்..!!

Dhanush: தனுஷ் நடிப்பில் 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் அமலாபால், சமுத்திரகனி, விவேக் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமுத்திரக்கனி இந்த படத்தில் தனுஷுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனுஷ், ஜிவி காம்போவில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் அசத்தல் ஆல்பம்! மாஸ் அப்டேட்!

இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பார்த்தால் இன்ஜினியரிங் வேலை மட்டும் தான் பார்ப்பேன் என்று உறுதியாக இருக்கும் நாயகனை சுற்றி தான் இந்த படத்தின் கதை இருக்கும். வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் திசையில் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது.

அதேபோன்று சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படத்திலும் தனுஷ் சமுத்திரகனி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் சமுத்திரக்கனி தனியார் பள்ளி முதலாளியாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தனுஷ் அரசு பள்ளியில் ஆசிரியராக நடித்திருப்பார்.

vaathi movie samuthirakani

சிம்புவுடன் கைகோர்க்கும் தனுஷ் : எந்தப் படத்தில் தெரியுமா? கசிந்த ரகசியம்!

இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது நிலையில் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் சமுத்திரக்கனி பற்றி கூறுகையில், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த போது சிகரெட் பிடித்த தனுஷிடம் சமுத்திரக்கனி முழு நீள டயலாக் ஒன்றை பேசி இருப்பார்.

அந்த டயலாக்கை படமாக்கும் போது சமுத்திரகனி 5 6 முறை டேக் எடுத்துள்ளார். அப்படி டயலாக் பேசுவது சமுத்திரக்கனிக்கு கடினமான ஒன்றாக இருந்துள்ளது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு சுமார் நான்கு பக்க டயலாக் கொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷ், ரம்யா கிருஷ்ணன் சேர்ந்து நடிக்க இருந்த படம்.. கடைசி நேரத்தில் ஹீரோயின் மாறியது எப்படி?

இதனால் தனுஷ் கனி அண்ணன் எப்படியும் அதிக நேரம் எடுப்பார் தனக்கு ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் சமுத்திரகனி அந்த நாலு பக்க டயலாக்கையும் இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு டேக் போலாம் என்று கூறிவிட்டாராம். அதுவும் ஒரே டேக்கில் சமுத்திரக்கனி பேசி முடித்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.