தனுஷ், ஜிவி காம்போவில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் அசத்தல் ஆல்பம்! மாஸ் அப்டேட்!

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரும் தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் தற்பொழுது நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமும் கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கர்ணன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா அவர்களின் பயோபிக் திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதற்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத அளவிற்கு தனுஷ் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் முதலில் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்பொழுது பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா, ஜான் குக்கர் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் தற்பொழுது வெளிவர துவங்கியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ஹீரோ தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மூவரும் இணைந்திருக்கும் திரைப்படத்தை ஜிவி பிரகாஷ் மற்றும் தனுஷ் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் வறண்ட மண்ணும் குருதி குடிக்கும், புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் நான்தான் நீதி நான்தாண்டா நீதி என்ற பாடல் வரிகள் பதிவிட்டு பாடல் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

தல அஜித்திற்காக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் உருவாக்கிய 4 திரைப்படங்கள்?

மேலும் இந்த பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பொல்லாதவன் மயக்கம் என்ன ஆடுகளம் போன்ற திரைப்படத்தின் பாடல்களைப் போல இந்த பாடலும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பற்றி வைரலாகும் என்று ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைக்க வேண்டும் என்பதில் இயக்குனர் மிக கவனமாக இருந்து வருவதாகவும் அதற்கான புரமோஷன் பணிகளை தற்போது இருந்தே தொடங்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்திற்கு மிகப் பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் லான்ச் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews