400 படங்களில் நடித்து சேர்த்து வைத்த பணம்.. மகனை வைத்து தயாரித்த படத்தால் இழப்பு.. டெல்லி கணேஷ் திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் சுமார் 400 படங்கள் நடித்திருந்த நிலையில் தனது மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு சொந்த படம் எடுத்து அவர் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை இழந்ததாக கூறப்பட்டது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் நடிப்பு அனைவரையும் சிரிக்க வைக்கும். சினிமா உலகில் கிட்டத்தட்ட 50 வருடங்கள் இருந்து வருகிறார்.

3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

திருநெல்வேலியைச் சேர்ந்த டெல்லி கணேஷ் இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர். டெல்லியில் அவர் வசித்து வந்த நிலையில் தான் அவருக்கு பாரத நாடக சபாவில் இணைந்து நாடகம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து அவர் சென்னை திரும்பியதும், பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல், ரஜினி, சிம்பு, தனுஷ் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் அவர் 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறதோ, அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார் ஏழ்மை, இயலாமை, குற்ற உணர்வு, அறியாமை, வெகுலுத்தனம், பிடிவாதம் என்ற அனைத்து விதமான உணர்வுகளையும் அவர் தனது நடிப்பில் வெளிப்படுத்துவார்.

தணியாத தாகம் என்ற படத்தில் அவர் நாயகனாக நடித்துள்ளார். விசு இயக்கத்தில் வெளியான சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

கமலஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவரான டெல்லி கணேஷ் அவரது பல படங்களில் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவராக நடித்த டெல்லி கணேஷ், புன்னகை மன்னன் படத்தில் கமலின் அப்பாவாகவும் நடித்திருப்பார். அதேபோல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாலக்காட்டு சமையல்காரர் கேரக்டரில் நடித்த அவர் காதலா காதலாvபடத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

ஒரே நாளில் 2 படங்களில் அறிமுகமான நடிகை.. அறிமுகம் செய்த இயக்குனருடன் திருமணம்.. பல்லவியின் திரைப்பயணம்..!

நாயகன் படத்தில் கமலுக்கு விசுவாசியாக நடித்த டெல்லி கணேஷ், அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஜால்ரா தட்டும் மேனேஜராக நடித்திருந்தார். தேசிய அளவில் போற்றப்பட்ட தமிழ் திரைப்படமான பசி என்ற திரைப்படத்தில் நாயகி ஷோபாவின் தந்தையாக அவர் நடித்தது அனைவரையும் உருக வைக்கும் அளவுக்கு இருக்கும்.

அதேபோல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான சிந்து பைரவி படத்தில் இசை கலைஞராக நடித்த அவர் ரஜினிக்கு மாமனாராக எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் நடித்திருப்பார். அரசியல்வாதியாக தலைநகரம் திரைப்படத்திலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்தார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு கூட அவர் கருமேகங்கள் கலைகின்றன உள்பட ஐந்து படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் அவர் இருந்து பல படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களை பொறுத்தவரை கோட்டைபுரத்து வீடு என்ற தூர்தர்ஷன் சீரியலில் நடித்து புகழ் பெற்ற அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரகசியம், செல்லம்மா உள்பட பல சீரியல்கள் நடித்தார்.

இந்த நிலையில் தான் டெல்லி கணேஷ் மகன் மஹா நடிப்பில் உருவான என்னுள் ஆயிரம் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த படத்தை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிக மோசமான தோல்வியை அடைந்ததோடு சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் ஒரே ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டது. அதுவும் ஒரு சில நாட்களில் தூக்கப்பட்டுவிட்டது. சென்னையின் புறநகர் பகுதியில் எந்த தியேட்டரிலும் இந்த படம் வெளியாகவில்லை.

மோகனுடன் அறிமுகம்.. ரஜினியின் நாயகி.. புற்றுநோயால் மரணம்.. நடிகை ஜோதியின் அறியப்படாத தகவல்..!

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் சில திரையரங்குகளில் மட்டுமே வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு நல்ல ரிசல்ட் கொடுத்தாலும் மக்களிடம் போய் சேரவில்லை என்பது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் டெல்லி கணேஷ் கூறினார். சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்து சேர்த்து வைத்த பணத்தின் பெரும் பகுதியை அவர் இந்த ஒரே படத்தால் இழந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...