சென்னை திருப்பதி கோவிலில் சிஎஸ்கே வென்ற கோப்பை: சிறப்பு பூஜை..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த கோப்பை இன்று சென்னை வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பையை சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இன்று அதிகாலை நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது என்பது ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று முழுவதும் சென்னை அணி வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடி வரும் நிலையில் இன்று மதியம் கோபையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வந்தனர். இந்த நிலையில் சென்னை வென்ற கோப்பை இன்று சென்னை தி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு திருப்பதி ஏழுமலையான் காலடியில் கோப்பை வைத்து மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்னும் ஒரு சில நாட்களுக்கு இந்த கோப்பை சென்னையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...