நட்புக்காக கவுண்டமணி செஞ்ச காரியம் இதான் : உயிருக்கும் மேல அப்படி என்ன செஞ்சார் தெரியுமா?

நடிகர் நாகேஷ்-க்கு அடுத்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் யாரென்றால் அது நம் கவுண்டர் தான். கால் நூற்றாண்டாக காமெடியில் தடம் பதித்து இவர் இல்லாமல் தமிழ் சினிமா வரலாறு இல்லை என்று தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருப்பர் கவுண்டமணி.  ஊரிலிருந்து நடிப்பதற்காக சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு கிளம்பும் போது எல்லாம் தன்னுடைய தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு கிளம்பும் அளவிற்கு தாய் மீது மிகுந்த பற்று உள்ளவர். செந்திலுடன் கிட்டத்தட்ட 200 படங்களுக்குமேல் இணைந்து நடித்திருக்கிறார்.

யாரேனும் முக்கியத்துவம் கொடுத்து அவரை பார்க்க வந்த சமயத்தில், எல்லாரும் போய் அவரவர் வேலையை பாருங்கப்பா.. நாங்களும் உங்களைப் போல் மனிதர்கள்தான்!! என்றவாறு தட்டிக் கொடுத்து அனுப்பி வைக்கும் பழக்கமுடையவர்.

கவுண்டமணி ஆரம்ப கால கட்டத்தில் சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வருகையில் இவரது நண்பராக விளங்கியவர் நடிகர் பீலி சிவம். இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தவர். ஒரு நாள் வாய்ப்புத் தேடி அலைந்து ஒன்றும் கிடைக்காத நேரத்தில் நண்பர் பீலிசிவம் அடிக்கடி வயிறு ரொம்ப பசிக்கிறது என்று சொன்னதாகவும், அந்த நேரத்தில் புரோட்டா சாப்பிட வேண்டும் போல் இருக்கின்றது என்றும் கூறியிருக்கிறார்.

என்னது லோகேஷ் கனகராஜுக்கு சைக்காலஜி டெஸ்ட்-ஆ? கோர்ட்டுக்கு வந்த மனுவால் ஆடிப்போன லோகேஷ்

அவரை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு இரு, இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்ற கவுண்டமணி திரும்பி வரும் சமயத்தில் புரோட்டா வாங்கிவந்து பீலிசிவத்திடம் கொடுத்து சாப்பிட வைத்திருக்கின்றார்.

சாப்பிட்டு முடித்தபின் இருவரும் தான் வந்தோம். உன்னிடம் பணம் இல்லையே? இந்த சாப்பாடு எப்படி வாங்கி வந்தாய்? என்று பீலிசிவம் கேட்க கவுண்டமணி சொன்ன பதிலால் ஆடிப்போய் இருக்கிறார் பீலி சிவம். கவுண்டமணி ரத்தம் கொடுத்து, பணம் வாங்கி அந்த பணத்தில் சாப்பாடு வாங்கி வந்தேன் என்றார். இதனால் பீலி சிவம் நெகிழ்ந்து போனார். நட்புக்காக உயிரை கொடுப்பது, நட்புக்காக உயிரை கொடுப்பேன் என்று கூறும் நபர்களின் மத்தியில் கவுண்டமணி அவர்கள் உண்மைக்குமே நட்புக்காக உயிரை கொடுத்தவர் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews