என்னது லோகேஷ் கனகராஜுக்கு சைக்காலஜி டெஸ்ட்-ஆ? கோர்ட்டுக்கு வந்த மனுவால் ஆடிப்போன லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வன்முறையை அதிகம் காட்டியிருப்பார். சண்டை காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர்களை சீட்டின் நுனியில் இருக்க வைப்பது அவரது ஸ்டைல். ஆனால் இன்று அவரது இந்த மேக்கிங் ஸ்டைலே அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, போன்ற படங்களில் அதிகமான சண்டை காட்சிகள் இருக்கும்.

பல்வேறு தரப்பினரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேக்கிங் ஸ்டைலை பார்த்து பிரம்மிக்க ரசிகர் ஒருவரோ அவருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால், “இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளதால் அனைத்து வகையான ஊடகங்களிலும் ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும்.

தனுஷ்- சிவ்ராஜ் கூட்டணியில் உருவான ‘கொரனாறு‘ பாடல் : புழுதி பறக்கும் கேப்டன் மில்லர் 3-வது சிங்கிள்

மேலும் லோகேஷ் கனகராஜின் எல்லா திரைப்படங்களும் பெண்களை கொல்வதை புகழ்ந்திருப்பதாக உள்ளது. இதனால் இயக்குனரின் மனநிலையை உளவியலாளர் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் லியோ படத்தைப் பார்த்து தான் அதிக மன உளைச்சலுக்கு உள்ளானதால் நஷ்ட ஈடாக ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும்“ என அந்த மனுவில் கூறியிருக்கிறார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீதும் லியோ பட குழு மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய கோரி அந்த மனதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ சண்டைக்காட்சிகள், சைக்கோ வில்லன்கள், கொடூர கொலைகள் சார்ந்த சினிமாக்கள் வந்துள்ளன. ஆனால் இயக்குநர் ஒருவரின் கற்பனைத் திறனுக்கு எதிராக வழக்கு போடப்பட்டிருப்பது சினிமா வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். படங்கள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு தகுந்த சான்றிதழ் வழங்கப்ட்ட பிறகே தான் திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த மனுவால் தணிக்கைக் குழுவினர் மீதான நம்பகத்தன்மை குறைந்து கொண்டு வருகிறது. மேலும் சினிமா சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது. எத்தனையோ ஹாலிவுட் படங்களில் இதைக் காட்டிலும் கோரமான காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கெல்லாம் தடை கேட்டால் சினிமாவே இயக்க முடியாது என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews