முதல்ல போய் படிப்பா… அதுக்குள்ள சினிமாவுக்கு வந்துருக்க? ஒளிப்பதிவாளரை விரட்டிய பாரதிராஜா

ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம் விஜயகாந்த், மம்முட்டி, பிரபு, பிரபுதேவா, அர்ஜூன், பிரசாந்த், ஸ்ரீகாந்த், முரளி, பார்த்திபன், தனுஷ், பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தனது திரையுலகப் பயணங்கள் குறித்து இவ்வாறு சொல்கிறார்.

இன்னிக்கு சினிமாவில் 2 படங்கள் பண்ணுவதே பெரிய சாதனை தான்.  பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சேன். என்னோட மறுமலர்ச்சி பாரதிராஜா சார் வந்தபிறகு தான். நம்ம வந்து எம்ஜிஆர், சிவாஜி படங்கள்ல பார்த்து வளர்ந்துருக்கோம். எங்க வீட்டுல எம்ஜிஆர் படத்துக்குலாம் கூட்டிட்டுப் போக மாட்டாங்க.

இதையும் படிங்க… அஜீத், விஜய் இணைந்து நடித்த இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்காததற்கு இதுதான் காரணமா…?!

நம்ம சிவாஜி சார் படம் தான் பார்க்கணும். இதுதான் டீசன்டான பேஃமிலின்னு சொல்வாங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் எம்ஜிஆர் படமே பார்த்தது கிடையாது. ஆனா எனக்கு எம்ஜிஆர் படம் பார்க்கறதுக்கு ரொம்ப ஆசை இருக்கும். ஆனா வீட்டுல பயம் இருக்கும். எம்ஜிஆர் படம் போறதை சொன்னால். எம்ஜிஆர் படம் போகணும்னு ஆசைப்பட்டதுக்குப் பிறகு தான் அவரோட படங்கள் அத்தனையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

ராபர்ட் சார் தான் என்னை பாரதிராஜா சார்க்கிட்டே கூட்டிட்டுப் போனாரு. நீ என்னப்பா படிக்கிற வேலையைப் போய் பாருப்பா… இப்பல்லாம் சினிமாவுக்கு வந்துருக்க? நீ என்ன படிச்சிட்டுருக்க? காலேஜ். முதல்ல போய் படி. அதுக்கு அப்புறம் தான் இது. அப்புறம் கூப்பிட்டாரு.

ஒரு விஷயம் தெரியுமா உனக்குன்னு கேட்டாரு. பிலிம் இன்ஸ்டிட்யூட்னு ஒண்ணு இருக்கு. அது ஒனக்குத் தெரியுமா?ன்னு கேட்டாரு. இல்ல சார். தெரியாதுன்னு சொன்னேன். முதல்ல அதைப் போய் கத்துக்கோன்னாரு.

இதையும் படிங்க… தைரியம் சொன்ன கமலை முட்டாளாக்கிய நாகேஷ்… கடைசி காலத்திலும் காமெடிதான்..!

எங்கிட்ட நீ என்ன கத்துப்ப? நானே நிவாஸ் கிட்டத்தான் கத்துக்கறேன். தெரியுமான்னு கேட்டார். முதல்ல கத்துக்கோ. அப்போ தான் வளர முடியும். இல்லைன்னா எங்கிட்ட என்ன இருக்கோ அது தான் உங்கிட்ட வரும்னாரு. ஒரு இன்ஸ்டிட்யூட் போய் படிக்கும்போது பல விஷயங்கள் கத்துக்கலாம் அப்படின்னு சொன்னாரு. அப்புறம் தான் ராபர்ட் சார் கைடு பண்ணாரு. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து படிச்சேன்.

ஒளிப்பதிவாளர் எம்வி.பன்னீர் செல்வம் மக்கள் ஆட்சி, சுகமான சுமைகள், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், உள்ளே வெளியே, அபிமன்யு, அரசியல், ஹவுஸ்புல், தேவதையைக் கண்டேன், வெள்ளித்திரை, வியாபாரி, ஏப்ரல் மாதத்தில் உள்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.