தமிழகம்

மதிய உணவில் கோழிக்கறி! தமிழக முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குதல், சிற்றுண்டி திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி இருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வாரம் ஒரு முறை மதிய உணவில் சிக்கம் மற்றும் கோழிக்கறி வழங்க முடிவெடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகை: மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிப்பு!!

இத்தகைய திட்டம் அம்மாநில பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்திருந்தது. அதே போன்று தமிழகத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ல் கோழிக்கறி மற்றும் பருவகால பழங்கள் வழங்கும் திட்டம் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடி தூள்!! போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!!

மேலும், அசைவம் சாப்பிடாத குழந்தைகளுக்கு என்ன வழங்குவது என்பது தொடர்பாக, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Revathi

Recent Posts