பொங்கல் பண்டிகை: மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 13, 14ம் தேதிகளில் மாலை 5 முதல் இரவு 10 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பயணிகளின் வரத்து அதிகமாகவே இருக்கும்.

பொங்கல் பண்டிகை: மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிப்பு!!

இதன் காரணமாக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜனவரி 18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும்.

அடி தூள்!! போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!!

இந்நிலையில் ஜனவரி 13,14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் இச்சேவை 3 நாட்களுக்கு மட்டுமே இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.