அடி தூள்!! போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!!

தமிழகத்தில் போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிற்கிணங்க பொங்கல் திருநாளை முன்னிட்டு சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு போகுவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து பணிக்குழு ஆகியவற்றில் பணி புரியும் பணியாளர்கள் 2022-ம் ஆண்டு 92 நாட்கள் பணி புரிந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.85 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே போல் 151 நாட்கள் மற்றும் அதற்கு மேல் குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு ரூ.195 ரூபாயும், 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 625 ரூபாய் பொங்கள் “சாதனை ஊக்கத்தொகை” வழங்கப்படும் என தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, 1,17,129 போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ரூ.7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் இத்தகைய உத்தரவால் போக்குவரத்து கழக பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.