நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்.. இன்று தமிழகத்தில் கொட்டப்போகுது மழை..!

நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பமாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் உக்கிரமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பொது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக கோடை வெயில் ஒரு பக்கம் கொளுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் ஆங்காங்கே மழை பெய்து குளிர்ச்சியை தந்து கொண்டிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Agni Natchathiram starts on May 4 SECVPF

கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து அவ்வப்போது மழையின் மூலம் பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திர நாட்களை எப்படி கடக்க போகிறோம் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் தற்போது மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அது மட்டும் இன்றி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு வரும் 6 அல்லது 7ஆ, தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அதன் பிறகு ஒரு சில நாட்கள் தமிழக கடற்கரை பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிட்டத்தட்ட அக்னி நட்சத்திர நாட்களை பொதுமக்கள் மழையின் காரணமாக சிரமம் இன்றி கடந்து விடுவார்கள் என்று தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.