இந்தியா வருகிறார் ChatGPT சி.இ.ஓ.. என்ன திட்டம்..?

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை தயாரித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் என்பவர் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சாம் ஆல்ட்மேன் ஜூன் 5ஆம் தேதி இந்தியா வர இருப்பதாகவும் அவர் ஒன்பதாம் தேதி வரை இந்தியாவில் தங்கி இருந்து பல தொழில் அதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

உலகின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் ChatGPT உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ இந்தியாவுக்கு வர இருப்பது பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு குறித்த எதிர்காலம் குறித்து அரசு அதிகாரிகள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை அவர் சந்தித்து ஆலோசனை செய்வார் என்றும் ஜூன் ஏழாம் தேதி நாஸ்காம் இந்தியா தலைமைத்துவ மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் தனது முக்கிய உரையை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியின் உலகளாவிய மையமாக இந்தியா வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் சாம் வருகை முக்கியத்துவம் பெறுவதாக தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி அதிகம் தேவைப்படும் என்றும் இதில் அதிக முதலீடு செய்யவும் தொழிலதிபர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆல்ட்மேன் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஆவார், இது ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி டெக்னாலஜி என்றும், இது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள செயற்கை நுண்ணறிவை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆல்ட்மேனின் இந்தியப் பயணம், நாட்டின் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதோடு, இந்தத் துறையில் அதிக முதலீட்டை ஈர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews