சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சிபிஎஸ் மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதே போல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் 10:30 மணிக்கு தொடங்கும் என்றும் 01.30 வரை தேர்வு நடைபெறும் என்றும் செயல்முறை தேர்வுகள் தொடர்பான செய்திகளை cbse.gov.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும் என்றும் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பு cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.