Category: தமிழகம்

cm vijay niti

தமிழ்நாடு மட்டுமல்ல, விஜய் தேசிய தலைவர் ஆகிவிட்டார்.. நிதி ஆயோக் கூட்டத்தில் கவனிக்கப்பட்ட முதல்வர்கள் பட்டியலில் விஜய் தான் முதலிடம்.. விஜய்யின் பேச்சை பிரதமரே ரசித்து கேட்ட ஆச்சரியம்.. பாஜகவை தோற்கடித்தவர், பாஜகவை விமர்சித்தவர் என்றாலும் விஜய் மீது மோடிக்கு நல்ல மரியாதை ஏற்பட்டுவிட்டது.. கூடிய சீக்கிரம் அமித்ஷாவுக்கும் ஏற்படும்.. உண்மையான மக்கள் தலைவனை யாருக்கும் பகைத்து கொள்ள மனசு வராது.

ஜூன் 12, 2026, 17:47
stalin udhayanidhi

தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்த திமுகவின் குழு.. ஒரு குழு கூட நம்ம ஆட்சியில் ஊழல் அதிகம், வாரிசு அரசியல் தான் காரணம், அதிகபட்சமான பவர் செண்டர் என்று சொல்லவில்லை.. கூட்டணி கட்சிகள் ஒத்துழைக்கலையாம்.. மாவட்ட செயலாளர்கள் வேலை செய்யலையாம்.. சீட் கிடைக்காதவர்கள் எதிரணியில் சேர்ந்து துரோகம் செஞ்சிட்டாங்களாம்.. இப்படி ஆய்வு குழு நடத்தினா விளங்கிரும்…

ஜூன் 12, 2026, 11:16
coovam

இந்த விஜய் கையை வச்சா அது ராங்கா போனதில்லை.. நம்ம சென்னை, சிங்கார சென்னைன்னு முந்தைய ஆட்சியாளர்கள் மாதிரி ஏமாத்த மாட்டோம்.. அஞ்சு வருஷம் கழிச்சு சென்னைக்கு வர்றவங்க, இது நம்ம சென்னை தானா? சிங்கப்பூரான்னு ஆச்சரியப்படனும்.. பக்கிங்காம் கால்வாயில படகு ஓடும்.. கூவம் ஆறுல விளக்கேத்தி கொண்டாடலாம்.. ஆட்சின்னா இதுதான்னு மக்கள் பாராட்டுற வகையில் ஆட்சி செய்வாரு நம்ம சிஎம் விஜய்…!

ஜூன் 11, 2026, 16:06
keerthana minister

37,000 கோடி ரூபாய் முதலீடு ஆந்திராவுக்குப் போனதும்… தவெக அரசுக்கு தொழில் நடத்த தெரியல, அனுபவம் இல்லைன்னு மேடைக்கு மேடை கூவினீங்களே! கதறினீங்களே! இப்போ பாத்தீங்களா… எங்களோட ஒற்றை ஆக்ஷன்ல வியட்நாமோட வின்பாஸ்ட் கம்பெனி 7,000 கோடியோட தூத்துக்குடியில வந்து நிக்குது! நாங்க களத்துல இறங்க ஆரம்பிச்சா, உலகமே இங்க வந்து கியூவுல நிக்கும்! இது வெறும் ஆரம்பம்தான்… இனிமேதான் எங்களோட ஒரிஜினல் ஆட்டமே இருக்கு!

ஜூன் 11, 2026, 11:22
vijay rahul 2

25 மாநகராட்சிகளையும் மொத்தமா அள்ளுறதுக்கு முதல்வர் விஜய் இப்போதே மாஸ்டர் பிளான் போட்டு ஸ்கெட்ச் பண்ணிட்டார் ! காங்கிரசுக்கு 3, விசிகவுக்கு 2 மேயர் பதவிகள்னு அதிகார பகிர்வை பக்காவா பிரிச்சு தவெக கூட்டணி களம் இறங்கப்போகுது. கூட்டணிக்குள்ள நாங்க காட்டுற இந்த கெத்துதான் தேர்தல் களத்துல எங்களோட பலத்தை இன்னும் பல மடங்கு கூட்டப்போகுது. இனிமே எங்களோட ஆட்டத்தை யாராலயும் தடுக்க முடியாதுடா!”

ஜூன் 10, 2026, 11:23
modi vijay

மத்திய அரசு கொடுத்த பேரிடர் நிவாரண நிதி.. பல ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட்ட ரயில் திட்டங்கள் உயிர்த்தெழும் ஆச்சரியம்.. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து காரியத்தை சாதிக்கும் தவெக அரசு.. 3 சேனல் போயிருச்சுன்னு கூப்பாடு போடும் மீடியாக்கள் இதை பற்றி ஒரு செய்தியாவது வெளியிட்டிருக்குமா? குற்றம் கண்டுபிடிப்பது மட்டும் தான் மீடியாக்களின் வேலையா? நல்லது செய்தால் பாராட்ட வேண்டாமா?

ஜூன் 10, 2026, 09:12
admk dmk 3

தேர்தல் அரசியலில் அண்ணாமலைக்கு தோல்வி மேல் தோல்வி தான்.. 2021 தேர்தலில் அவரே தோல்வி அடைந்தார்.. பாஜக 4 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி.. 2024 தேர்தலில் அண்ணாமலை கோவையில் தோல்வி அடைந்தார்.. அவர் அமைத்த கூட்டணிக்கு ஒரு வெற்றி கூட இல்லை.. 2026ல் அண்ணாமலை போட்டியிடவில்லை என்றாலும், அவர் பிரச்சாரம் செய்தும் ஒரே ஒரு தொகுதியில் தான் வெற்றி.. 3 தேர்தலில் தோல்வி அடைந்த அண்ணாமலை எங்கே? முதல் தேர்தலிலேயே ஆட்சி அமைத்த விஜய் எங்கே? ரெண்டு பேரையும் ஒப்பிடவே கூடாது…

ஜூன் 8, 2026, 18:48
vijay bussy aadhav

ராஜினாமா பண்ணிட்டு தவெகவுக்கு வந்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களில் 3 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை? வாரிய தலைவர் பதவி மட்டும் தான்.. எங்க கட்சி எம்.எல்.ஏ ஆகனும்ன்னா அதுக்கு இளைஞர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ளவர்களாகவும் இருக்கனும்.. கறாராக சொன்னாரா முதல்வர் விஜய்? எம்எல்ஏ சீட் வேணும்னு அடம் பிடிக்கிறவங்க ஒன்னு புரிஞ்சுக்கோங்க… இது பழைய மாதிரி வாரிசுகளுக்கும் சிபாரிசுக்கும் சீட் கொடுக்குற கட்சி இல்லை! விஜய் ஒருமுறை ஆலோசிச்சு முடிவு எடுத்துட்டாருன்னா… அதுக்கு அப்புறம் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரு…

ஜூன் 8, 2026, 17:55
cm vijay 34

கரண்ட் போனாலும் பரவாயில்லை, கொஞ்ச நாளில் எங்க விஜய் அண்ணா சரி பண்ணிடுவாரு.. அங்கங்க சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பது உண்மை தான்.. ஆனாலும் அதையும் எங்க விஜய் தம்பி சரி பண்ணிடுவாரு.. லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் ஃபுல்ஸ்டாப் வச்சாச்சு.. இது என் மகன் விஜய் செய்த சாதனை.. ஒன்னு ரெண்டு தொழிற்சாலைகள் கையை விட்டு போனது உண்மை தான், ஆனாலும் முதலீட்டை அவர் எப்படியும் குவிப்பாரு, வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவாரு, எங்களுக்கு விஜய் அங்கிள் மேல நம்பிக்கை இருக்குது.. பொதுமக்கள் கருத்து.. இவ்வளவு சப்போர்ட் இதுக்கு முன்னாடி இருந்த முதலமைச்சர்கள் யாருக்காவது இருந்திருக்கா?

ஜூன் 8, 2026, 15:27
annamalai students

அண்ணாமலை முதலில் கல்லூரி மாணவர்களை தான் குறிவைப்பார்.. ஒவ்வொரு கல்லூரியிலும் சொற்பொழிவு நடத்தி அவர்களை அறிவுசார் அரசியலுக்கு கொண்டு வருவார்.. விஜய்க்கு விழுந்தது சினிமா மோக வாக்குகள் அல்ல.. திமுக, அதிமுகவை பிடிக்காதவர்கள், விஜய் சரியான நேரத்தில் எண்ட்ரி ஆனதால் அவருக்கு வாக்களித்தனர்.. இனிமேல் திமுக, அதிமுகவை பிடிக்காதவர்கள் அண்ணாமலைக்கு ஓட்டு போட வாய்ப்பு அதிகம்.. விஜய் போன பாதையில் போய் விஜய்க்கே ஆப்பு வைப்பார் அண்ணாமலை.. திமுக, அதிமுக படித்த பள்ளியில் விஜய் ஹெட்மாஸ்டரா இருக்கலாம், ஆனால் அண்ணாமலை பிரின்சிபால்..

ஜூன் 8, 2026, 11:00