விஜய் முதல்வரானதை ரஜினியால் பொறுத்து கொள்ள முடியவில்லை.. வயிற்றெரிச்சலில் தான் அண்ணாமலையை தூண்டி விடுகிறார்.. அண்ணாமலை வெளியேறும் அதே நேரத்தில் லதா ரஜினிகாந்த் ஒரு இயக்கம் தொடங்க வேண்டிய அவசியம் என்ன? விஜய் ஆட்சி கவிழனும், அல்லது 2031ல் மீண்டும் விஜய் வந்துவிட கூடாது.. இதுதான் ரஜினியின் எண்ணம்.. ரஜினிக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவே கிட்டத்தட்ட முறிந்துவிட்டது..ஜூன் 7, 2026, 17:34
அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற ஒரே காரணம் இதுதான்.. 2029ல் திமுக + பாஜக உறுதி.. அப்போது அண்ணாமலையை தூக்குங்கன்னு திமுககாரங்க சொல்லுவாங்க எடப்பாடி சொன்ன மாதிரி.. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜகவை கொண்டு வர முயற்சித்தேன்.. ஆனால் பாஜக, அதிமுக, திமுக பின்னாடியே போகுது.. இது நமக்கு செட் ஆகாது.. மேலும் தமிழக பாஜகவில் இருக்குறவங்க எல்லோருமே எனக்கு எதிரியாகிட்டாங்க.. இனிமேல் இந்த கட்சியில் குப்பை கொட்ட முடியாது.. மேலிடத்தில் உறுதியாக கூறிய அண்ணாமலை…ஜூன் 7, 2026, 12:02
ஜாய் கிரிசில்டா.. விஜய்யின் பல படங்களின் ஆடை வடிவமைப்பாளர்.. மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தையை பெற்று டி.என்.ஏ மூலம் அவர் தான் தந்தை என நிரூபித்தவர்.. இன்று தவெகவில் ஐக்கியம்.. அடுத்தது த்ரிஷாவா?ஜூன் 6, 2026, 23:01
அருண் ஐபிஎஸ்-ஐ DVAC டைரக்டரா போட்டப்போ தியேட்டர்ல வர்ற சினிமா கதைன்னு சொல்லி நக்கலடிச்சீங்கல்ல? இப்ப புரியுதா முதலமைச்சர் விஜயோட நிஜமான ‘லாங்-டேர்ம் பொலிட்டிகல் கேம்’! ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டு கதையை முடிவு பண்ணாதீங்க… க்ளைமாக்ஸ்ல தான் இந்த தவெக ஆட்சியின் ஆட்டமே ஆரம்பமாகும்!ஜூன் 6, 2026, 16:52
அண்ணாமலை 2031 வரை பொறுமையாக இருக்க மாட்டார்.. 5 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார்.. அவருடைய ஆதரவாளர்களும் போட்டியிடுவார்கள்.. 2029 பாராளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பார்.. சீமான், டிடிவி தினகரன், அன்புமணி, தேமுதிக, கூட்டணியில் இணைய வாய்ப்பு.. விஜய் பக்கம் இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக், மதிமுக இருக்கும்.. அதிமுக, திமுக தனித்துவிடப்படும்.. ரிசல்ட் பரபரப்பாக இருக்கும்…ஜூன் 5, 2026, 20:30
கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.. அண்ணாமலை கட்சி ஆரம்பிக்கட்டும்.. அவசரப்பட்டு தவெகவில் இணைந்திட வேண்டாம்.. அதிமுக, திமுகவில் உள்ள அதிருப்தி பிரமுகர்கள் காத்திருப்பு.. அவசரப்பட்டு ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களும் அண்ணாமலை அணிக்கு தாவ திட்டம்.. இனிமேல் அதிமுக, திமுகவுக்கு வாய்ப்பில்லை.. அண்ணாமலை, விஜய் தான் எதிர்கால அரசியல்.. ஈ மொய்ப்பது போல் இரு கட்சியிலும் சேர துடிக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்.. மாறுகிறது தமிழக அரசியல்…ஜூன் 5, 2026, 11:35
விஜய் சொன்னதை செய்வாருங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்குது.. அப்படியே அவர் செய்யலைன்னா கூட நாங்க அவர் மேல கோபப்பட மாட்டோம்.. அவரு டாஸ்மாக்கை இன்னும் மூடனும், சட்டம் ஒழுங்கை சரி செய்யனும், போதையை ஒழிக்கனும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கனும், வேலைவாய்ப்பை அதிகப்படுத்தனும்.. இதை செய்தா போதும்.. 2500 கொடுக்காட்டியோ, தாய்மாமன் சீர் செய்யாட்டியோ கூட பரவாயில்லை.. எங்களால உழைச்சு சாப்பிட முடியும்.. பொதுமக்களின் நெகிழ்ச்சி கருத்துக்கள்..ஜூன் 4, 2026, 15:10
உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கலாம், ஆனால் அவரை விஜய் கண்டு கொள்ளவே மாட்டார்.. ஆ ராசா இன்னும் எத்தனை பேட்டி கொடுத்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் விஜய் அவரை கண்டு கொள்ளவே மாட்டார்.. இன்னும் மற்றும் பலர் கேள்வி கேட்டாலும் கண்டு கொள்ள மாட்டார்.. விஜய்யின் ஒரே டார்கெட் ஸ்டாலின் தான்.. முதல்வராக இருந்தவரை எம்.எல்.ஏ கூட ஆக முடியாத லெவலுக்கு பண்ணியாச்சு.. இன்னும் அவர் பேரை டேமேஜ் பண்ணிகிட்டே இருப்பார்.. இரண்டாந்தர மூன்றாம் தர அரசியல்வாதிகள் கேள்வி கேட்டு கேட்டு அவங்களாகவே ஓஞ்சு போயிடுவாங்க…ஜூன் 3, 2026, 21:30
அண்ணாமலையை வைத்து பாஜக புது கேம் விளையாட முயற்சிக்கும்.. பாஜகவை முழுவதுமாக வெட்டிவிட்டு வந்தால் தான் அண்ணாமலையை தமிழக மக்கள் நம்புவார்கள்.. மோடி என் ஆசான்.. அமித்ஷா என் குரு என்று சொல்லி புதுக்கட்சி தொடங்கினால் அண்ணாமலையை யாரும் நம்ப மாட்டார்கள்.. விஜய் மாதிரி தனது எதிரி யார் என்பதை பிரகடப்படுத்தி அண்ணாமலை வர வேண்டும்.. அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார் என்பதை அறிவிக்க வேண்டும்.. அண்ணாமலைக்காக ஒரு பெரிய கூட்டமே தமிழகத்தில் இருக்குது.. அதை அவர் சரியாக பயன்படுத்துவாரா?ஜூன் 3, 2026, 17:10
பார்க்கத்தானே போறீங்க… இந்த விஜய்யோட ஆட்டத்தை! பழைய கவர்ன்மென்ட்ல ப்ராஜெக்ட்டை குட்டி குட்டியா பிரிச்சு, உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு டெண்டர் கொடுத்த காலம் எல்லாம் ஓவர்! இது தவெக யுகம்… ஐம்பது லட்சமா இருந்தாலும் சரி, ஐந்து கோடியா இருந்தாலும் சரி, எல்லாமே இனி ஆன்லைன்ல ‘ஓப்பன் டெண்டர்’ தான்! தில்லிருந்தா நேர்மையா மோதி வேலையை வாங்கிட்டுப் போ!ஜூன் 2, 2026, 11:02