அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வைத்தது.. மன்னிப்பு கூட கேட்க தயார் என்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் சேர்க்க மறுத்தது.. கொங்கு பகுதியில் பெரும் செல்வாக்குள்ள் செங்கோட்டையனை நீக்கியது.. எடப்பாடி செய்த தவறு ஒன்றா இரண்டா? ஒவ்வொரு தவறுக்கும் ஒரு சதவீத வாக்கு வங்கியை இழந்தது அதிமுக.. இடைத்தேர்தலிலும் தோற்றால் அதிமுக காலியாவது உறுதி…ஜூன் 17, 2026, 14:17
திமுகவாவது அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியாக வர வாய்ப்பு இருக்குது.. ஆனால் அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை.. இனி ஆளுங்கட்சியாகவும் வரமுடியாது.. எதிர்க்கட்சியாகவும் வரமுடியாதுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருச்சு.. அதனால் தான் தெறிச்சி ஓடுறாங்க.. அதிமுககாரங்களால் 5 வருடத்திற்கு மேல் அமைச்சர்களாக இல்லாமல் இருக்க முடியாது.. எனவே தவெகவை நோக்கி ஓடுறாங்க..ஜூன் 17, 2026, 11:08
எதிரிங்க எப்போ நம்மள பார்த்து பயப்பட ஆரம்பிக்கிறானோ… அப்போதான் நம்மளோட உண்மையான ஆட்டமே ஆரம்பமாகுது! இனி அதிமுக அவ்வளவுதான், அந்த சகாப்தமே குளோஸ்’னு உங்க சொந்த அடிமட்ட தொண்டர்களே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! மாஸ் பாலிடிக்ஸ் பண்ணுற முதலமைச்சர் விஜய்யோட வேகத்துக்கு முன்னாடி எடப்பாடியோட பழைய பாணி பாலிடிக்ஸ் மொத்தமா அவுட்டேட்டட் ஆயிடுச்சு!ஜூன் 16, 2026, 21:55
எடப்பாடி மகனால் அழியும் அதிமுக.. உண்மையான தொண்டர்களுக்கு மரியாதையே இல்லை… உள்ளூர் பிரமுகர்கள் முதல் அமித்ஷாவை பார்த்து முடிவெடுப்பது வரை எல்லாமே ஈபிஎஸ் மகன் மிதுனுக்கு உரிமை கொடுத்தாச்சு.. அந்த பக்கம் உதயநிதி திமுகவை அழிக்கிறார்.. இந்த பக்கம் மிதுன் அதிமுகவை அழிக்கிறார்… அரசியல்ல எப்ப வாரிசுன்னு ஒன்னு வந்துருச்சோ அதுக்கு அப்புறம் அந்த கட்சி விளங்காது…ஜூன் 16, 2026, 15:59
உள்ளாட்சி நிர்வாகம் டோட்டலா திமுக கையில இருக்குது.. முதலமைச்சர் படத்தை கூட மாட்ட மாட்டோம்ன்னு அராஜகம் பண்றாங்க.. இப்படி அராஜகம் பண்ணி தான் ஆட்சியை இழந்தீங்க.. அந்த அராஜகம் தொடர்ந்தால் உள்ளாட்சி தேர்தலில் ஒரு கவுன்சிலர் கூட கிடைக்காது.. மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.. இந்த டிஜிட்டல் உலகத்துல நீங்க செய்ற தப்பெல்லாம் அடுத்த நிமிஷமே மக்கள் போன்ல வந்துடுது.. ஜூன் 15, 2026, 19:14
தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கலாம், தோற்கலாம் அது வேற விஷயம்.. எம்ஜிஆர் கூட நாடாளுமன்ற தேர்தலில் தோற்றாரு.. கருணாநிதி, ஜெயலலிதா கூட தோத்தாங்க.. ஆனால் விஜய்யிடம் தோத்தவங்க ஆட்சியை மட்டும் இழக்கல.. கட்சியையே பறிகொடுத்துட்டு நிற்குறாங்க.. அதிமுக கூடாரம் கிட்டத்தட்ட காலியாகிடுச்சு.. 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் திமுகவும் காலியாகிடும்.. இப்படி ரெண்டு திராவிட கட்சிகளை விஜய் காலி பண்ணுவாருன்னு யாரும் கனவுல கூட நினைச்சு பார்க்கலை…ஜூன் 15, 2026, 18:52
விஜய்யை இவ்வளவு பெரிய கட்சியா இருந்தும் சமாளிக்கவே முடியலைல.. இனிமேலும் சமாளிக்க முடியாது.. மக்களை 50 வருஷமா அல்லல்படுத்திய ரெண்டு திராவிட கட்சிகளையும் முடிக்காம விடமாட்டாரு.. இனிமேல் வேற மாதிரி அரசியல் தான்.. நல்லா படிங்க, போதுமான அளவுக்கு உழைச்சு சொத்து சேர்த்துக்கோங்க.. அதுக்கு அப்புறம் தூய அரசியலுக்கு வாங்க.. இதுதான் இளைஞர்களுக்கு சொல்லும் தவெகவின் தாரக மந்திரம்..ஜூன் 14, 2026, 15:49
காணாங்காடு என்பது தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ரிஷிவந்தியம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இந்த ஊருக்கு இப்போது தான் முதன்முதலில் பேருந்து வசதி கிடைத்துள்ளது. பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்.. அவனவன் ஜெட் ராக்கெட், புல்லட் டிரெயின்னு போயிகிட்டு இருக்கான்.. இப்பதான் இந்த கிராமத்து மக்கள் பஸ்ஸையே பார்க்குறாங்க.. 60 வருஷமா என்ன தான் ஆட்சி நடத்துனீங்க?ஜூன் 14, 2026, 10:34
அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா போய் முதலீட்டை அள்ளிகிட்டு வந்துட்டாங்க.. Hyosung நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர்ல 2வது யூனிட் அமைக்க ஒப்புக்கொண்டது.. புதிய அரசு கொடுக்கும் ஒத்துழைப்பால் முதலீடு செய்ய முடிவு.. லஞ்சம் கிடையாது, ஊழல் கிடையாது, தொழில் தொடங்க வருபவர்களுக்கு சலுகையால் குவியும் முதலீடுகள்.. இதுதான் மாற்றம்…ஜூன் 13, 2026, 18:27
2016க்கு அப்புறம் மக்கள் கூட்டம் தானாக கூடியது என்றால் அது மூன்றே மூன்று பேருக்கு மட்டும் தான்.. ஒன்னு அண்ணாமலை.. ரெண்டு சீமான்.. மூணு விஜய்.. இந்த மூவரில் விஜய் மட்டுமே வெற்றி பெற்றவர்.. ஆட்சியை பிடித்தவர்.. அண்ணாமலைக்கு அடுத்தடுத்து தோல்விகள்.. சீமானுக்கு இன்னும் டெபாசிட்டே கிடைக்கவில்லை.. எனவே விஜய்யை நெருங்க இவர்கள் ரெண்டு பேராலும் முடியாது.. ரெண்டு பேரும் சேர்ந்தாலும் முடியாது.. வந்த கூட்டமெல்லாம் ஓட்டா மாறி ஆட்சியும் அமைச்சாச்சு.. மாற்றத்துக்கான ஆளும் வந்தாச்சு.. இனிமேல் இன்னொரு மாற்றம் தேவையில்லை.. புது பிளேயரும் தேவையில்லை…ஜூன் 13, 2026, 14:15