வரலாற்றை திருப்பிப் பாருங்க தம்பி! எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதா அம்மாவையும் இதே மாதிரிதான் நீங்க வம்புக்கு இழுத்து, அவதூறு பேசி டீஃபேம் பண்ண பார்த்தீங்க. ஆனா ஜனங்க உங்களுக்கு ஆப்பு அடிச்சாங்க! இப்போ அதே தப்பைத்தான் விஜய் விஷயத்துலயும் பண்றீங்க. நீங்க அவரை எவ்வளவுக்கு எவ்வளவு டார்கெட் பண்ணி அடிக்கிறீங்களோ… அந்தளவுக்கு அவருக்கு மக்கள் மத்தியில சிம்பதியும் செல்வாக்கும் ஏறும்! மொதல்ல உங்க தப்பு கணக்கை மாத்துங்க! இல்லைன்னா அரசியல்ல இருந்து காணாமல் போயிடுவிங்க…ஜூன் 22, 2026, 08:08
அதிமுக, திமுக மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் சேர்ந்தால் கூட விஜய்யை தோற்கடிக்க முடியாது.. ஏனென்றால் அந்த பக்கம் இருப்பது சுயநலவாதிகளின் கூட்டணி.. இந்த பக்கம் இருப்பது மக்களின் கூட்டணி … திமுகவை எதிர்த்து உருவான அதிமுக, இன்று திமுகவுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டது.எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆன்மா இதை ஒருபோதும் ஏற்காது.ஜூன் 22, 2026, 07:50
வாரிசுகள் அழிந்த அரசியல் சாம்ராஜ்யங்கள்.. ஒருஅரசியல் கட்சி தலைவரின் வாரிசு அரசியலுக்கு வருகிறார் என்றால் அந்த கட்சி அழிய போகிறது என்று அர்த்தம்.. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் ஆகியவை இதற்கு உதாரணங்கள்.. அரசியல் என்பது பிசினஸ் அல்ல, எனக்கு அப்புறம் என் கம்பெனியை என் மகன் நடத்துவதற்கு.. இது மக்களாட்சி, மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும்…ஜூன் 21, 2026, 18:30
40 நாட்களில் ஒரு அரசாங்கத்தையே புரட்டி போட்டிருக்கிறார் முதல்வர் விஜய்.. அவர் அதிகமாக பேசவில்லை, ஆனால் இதுவரை இல்லாத எந்த முதல்வரும் செய்யாததை செய்து வருகிறார்.. ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் தமிழகத்தில் ஒரு ஃபைல் நகரும் என்பது திராவிட கலாச்சாரத்தில் இருந்ததே இல்லை.. இதுவொரு மெளன புரட்சி.. ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அதிகாரிகள் மாற மாட்டார்கள் என்று தான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் அதிகாரிகள் தான் முதலில் மாறியிருக்கிறார்கள்.. அந்த பயம் தான் விஜய்யின் வெற்றி.. இதை 50 வருடங்களுக்கு முன் செய்திருந்தால் இன்று தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர்…ஜூன் 21, 2026, 18:10
50 வருட அரசியலில் விஜய் ஒரு பேரதிசயம்.. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த ஆட்சி விஜய்க்கு இரண்டே வருடத்தில் கிடைத்துவிட்டது.. தமிழ்நாட்டில் இளைஞர்கள் இந்த அளவுக்கு அரசியலில் எழுச்சி அடைந்ததே இல்லை.. சாமானியர்கள் இதுபோன்று மொத்தமாக அமைச்சர்கள் ஆனதே இல்லை.. இதுவரைக்கும் சாமானியர் அமைச்சர் என்றால் கக்கன் ஒருவர் தான் உதாராணம்.. ஆனால் தவெகவில் இருக்கும் பாதி அமைச்சர்கள் எளியவர்கள்.. இந்த அரசியல் தான் இளைஞர்களின் நம்பிக்கை… இதில் க் என்பது என்ன?ஜூன் 21, 2026, 17:47
விஜய்யை குறைவா எடை போட்டு தான் திமுக ஆட்சியை இழந்தது.. இப்ப விஜய் ஆட்சியை குறைவா எடை போட்டு காயை நகர்த்தினா நிலைமை இன்னும் மோசமா போகும்.. த்ரிஷ்யம் படத்துல வர்ற மோகன்லால் மாதிரி தான் விஜய்.. போலீஸ் எப்படி யோசிக்கும்ன்னு முன்கூட்டியே யூகிப்பவர் மோகன்லால்.. அதேமாதிரி எதிர்க்கட்சி எப்படி யோசிக்கும்ன்னு யூகித்து அதற்கு முன்னரே காயை நகர்த்திவிடுவார்.. விஜய்யுடன் மோதி அசிங்கப்பட வேண்டாம்.. உதயநிதியால் விஜய்யை வீழ்த்தவே முடியாது..ஜூன் 21, 2026, 12:10
அதிமுக, திமுக இணைய வாய்ப்பா? கையை மீறி செல்லும் கட்சியினர்.. தடுக்க முடியாத எடப்பாடியார்.. அதிமுக, திமுக தனித்தனியாக இருந்தால் தவெகவை தோற்கடிக்க முடியாது என்பதால் இந்த விபரீத திட்டமா? இதில் காமெடி என்னவென்றால் ஒருவேளை அதிமுக, திமுக ஒரே கட்சியானால், மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒரே கட்சியில் இருப்பார்கள்.. என்ன ஒரு புதுமை?ஜூன் 21, 2026, 11:50
சீரியஸாக போகும் கனிமவள கொள்ளை.. ஸ்டாலின், எடப்பாடியார் ரெண்டு பேருக்குமே சிக்கல் தான்.. அதனால் தான் ரெண்டு பேருமே புலம்புறாங்க.. ஆட்சியை எப்படியாவது கவிழ்க்கனும்ன்னு பதறுறாங்க.. ஆனால் ஆட்சியை கவிழ்த்தா ரெண்டு பேருமே ஆட்சிக்கு வரமுடியாதுங்கிறதும் தெரியும்.. என்ன செய்வது என்று தெரியாமல் மாறி மாறி புலம்புவது சத்தமா கேட்குது.. ஒரே ஒரு விஜய், ரெண்டு திராவிட கட்சிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகிறாருன்னா, என்ன ஒரு பவர்?ஜூன் 21, 2026, 08:20
முதலமைச்சர் விஜய்யின் முதல் டார்கெட் செந்தில் பாலாஜி தான்.. செந்தில் பாலாஜியை சிறைக்கு தள்ளாமல் விடமாட்டார். செந்தில் பாலாஜி பாஜகவில் சேர்ந்தாலும் தப்பிக்க முடியாது.. மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறை பவர்புல் ஆனது.. அருண் ஐபிஎஸ் அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்ததும் இதற்கு தான்… மற்ற முன்னாள் அமைச்சர்களும் தப்பிக்க முடியாது.. கொஞ்சம் லேட் வேணும்னா ஆகலாம்..ஜூன் 21, 2026, 07:43
அதிமுகவை தேவையான அளவு உடைச்சாச்சு.. அடுத்தது திமுக தான்.. ஐயூஎம்எல் வந்தாச்சு, அடுத்தது மதிமுக தான்.. அதிமுக போலவே திமுகவுக்கும் எதிர்காலம் இல்லை என்று நினைப்பவர்கள் தவெகவுக்கு வர வாய்ப்பு.. வலையை வீசுகிறாரா ஆதவ் அர்ஜூனா.. வலையில் விழப்போகும் மீன்கள் எத்தனை? அரசியலில் எதிரியை வீழ்த்துவது எல்லோரும் செய்வது.. எதிரியே இல்லாமல் செய்வது தான் விஜய்யின் செயல்..ஜூன் 21, 2026, 07:28