Category: செய்திகள்

cm vijay secretariet1

சிஎம் விஜய் ஒரு ஆர்வக்கோளாறுல ஒரு 10 நாளைக்கு காலைல 10 மணிக்கு தலைமைச்செயலகம் வருவாருன்னு எதிர்பார்த்தாங்க.. ஆனால் 40 நாளும் தொடர்ச்சியா வருகிறார், இன்னும் 5 வருஷமும் வருவார்.. இனி தலைமை செயலகம் ஊழியர்கள் பம்பரமா சுத்தனும், இல்லைன்னா லீவு எடுத்துட்டு வீட்டுக்கு போயிரனும்.. இது விஜய்யோட ஆட்சி, இங்க கார்ப்பரேட் கம்பெனி அதிகாரிங்க மாதிரி வேலை செய்யனும்.. இதுக்கு முன்னாடி இருந்தமாதிரி ஓபி எல்லாம் அடிக்க முடியாது..

ஜூன் 23, 2026, 08:18
vijay vs annamalai 4

அண்ணாமலை 5 வருஷத்துல கட்சியை வளர்க்குறதுக்குள்ள, முதல்வர் விஜய் வேற லெவலுக்கு தவெகவை கொண்டு சென்றுவிடுவார்.. அண்ணாமலைக்கு கூட்டணி கட்சி கிடைக்குறதும் ரொம்ப கஷ்டம்.. ஓடுற குதிரையில தான் பணம் கட்டுவாங்க.. வெற்றியை நிரூபிச்சு காட்டிய தவெகவை நோக்கியே அரசியல் கட்சிகள் செல்லும்.. ஏற்கனவே பலமா இருக்குற விஜய்க்கு, கூட்டணி பலம் இன்னும் பூஸ்ட் தரும்.. அண்ணாமலை, முடிஞ்சா எதிர்க்கட்சி தலைவரா மாறுவதற்கு முயற்சி பண்ணுங்க…

ஜூன் 23, 2026, 07:27
cm vijay niti

பேசுங்க சிஎம் சார் பேசுங்க.. அரசியல் மேடையில் எதிரணியினர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பது ஒரு ஸ்ட்ராட்டஜியா இருக்கலாம்.. பத்திரிகையாளர்களிடம் பேசாமல் இருப்பதும் ஒரு ஸ்ட்ராட்டஜியா இருக்கலாம்.. ஆனால் சட்டமன்றத்தில் பேசியே ஆகனும்.. ஜெயலலிதா மாதிரி ஒவ்வொரு கேள்விக்கும் ஆதாரத்தோட பதிலடி கொடுங்க.. ராஜ்மோகன், ரமேஷ் பதிலடி கொடுக்கும்போதே ஃபயரா இருக்குது.. நீங்க பதிலடி கொடுத்தா பெரிய சம்பவமா இருக்கும்…

ஜூன் 23, 2026, 07:19
corruption2

திருடன் வீட்டிலேயே திருடுறது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஸ்பெஷல்.. ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் ஆகி, ‘மறுபடியும் வேலை கிடைக்குமா’ன்னு தவிச்சு போய் நின்ன உதவி பொறியாளர்கிட்டயே லஞ்சம் கேட்டீயே, அதுதான்பா அநியாயத்தோட உச்சம்! சஸ்பெண்ட் ஆனவன்கிட்டயே ஒன்றரை லட்சம் லஞ்சம் கேக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? இந்த துணிச்சல் தான் உங்க சிஸ்டத்தோட கேவலமான லட்சணம்!

ஜூன் 22, 2026, 20:56
fake protestors

லஞ்சம் வாங்க முடியலைங்கிற கடுப்புல விதவிதமா போராட்டம் பண்றாங்க.. துப்புரவு தொழிலாளர்களை தூண்டி விடுவது… டாஸ்மாக் ஊழியர்களை தூண்டி விடுவது.. நீ எத்தனை வேஷத்துல வந்தாலும், ‘தசாவதாரம்’ கமல் மாதிரி 10 வேஷம் போட்டாலும் உன் பருப்பு தவெக ஆட்சியில வேகாது.. உன் பின்னாடி யாரு இருக்காங்கன்னு மக்களுக்கே தெரியும்.. அரசு ஆக்சன் எடுக்க தொடங்கினால் அட்ரஸ் இல்லாம போயிடுவ… போலி போராளிகளுக்கு தவெகவினர் எச்சரிக்கை…

ஜூன் 22, 2026, 20:36
cm vijay niti

பயம் ஒரு மனுஷனை தலைகீழா மாத்தும்.. பொதுவா பயப்பட கூடாதுன்னு முன்னோர் அறிவுரை சொல்லியிருக்காங்க.. ஆனால் தவெக ஆட்சியின் அஸ்திரமே பயம் தான்.. லஞ்சம் வாங்கினா வேலை போயிடுங்கிற பயம் தான் இன்னிக்கு தூய ஆட்சிக்கு வழி வகுத்துருக்கு.. ஊழல் செய்தா அமைச்சர் பதவி போயிடுங்கிற பயம் தான் இன்னிக்கு ஒரு நல்லாட்சி நடைபெற காரணம்.. சில சமயங்களில் தைரியத்தை விட பயம் தான் நல்லது.. அப்படி ஒரு நல்லது தவெக ஆட்சியில் நடந்துள்ளது..

ஜூன் 22, 2026, 18:11
savukku Shankar case and goondas Act to be repealed or not: high Court verdict tomorrow

கட்சி தொடங்குவதற்கு முன்பே தனது எதிரி உதயநிதி என்பதை விஜய் பிக்ஸ் செய்துவிட்டார்.. என்னுடைய கணிப்பு கூட தவறிவிட்டது.. விஜய்யின் இந்த சரியான கணிப்பு தான் இன்று அவரை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துள்ளது.. ஆனால் அவரது ஆட்சியை கவிழ்க்க மிகப்பெரிய சதி நடந்து வருகிறது: சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் அதிர்ச்சி தகவல்….

ஜூன் 22, 2026, 17:19
vijay speech

விஜய்யே வந்துட்டாரு, நம்மலாள வரமுடியாதான்னு பலபேரு கனவு காணுறாங்க.. லதா ரஜினிகாந்த் ஒரு பக்கம் இயக்கம் ஆரம்பிக்கிறாங்க.. அண்ணாமலை இன்னொரு பக்கம் இயக்கம் ஆரம்பிச்சிட்டாரு.. ராகவா லாரன்ஸ் தனிக்கட்சி ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. இன்னும் சூர்யா உள்பட பலருக்கும் அரசியல் ஆசை இருக்குது.. ஆனால் எல்லோரும் ஒண்ணை மறந்துட்டாங்க.. ஒரே ஒரு சூரியன் தான்.. ஒரே ஒரு நிலா தான்.. அதுபோல ஒரே ஒரு விஜய் தான்.. விஜய் தான் தமிழ் சினிமாவில் கடைசி வசூல் மன்னன்.. அதே போல் விஜய் தான் நடிகராகி முதலமைச்சர் ஆன கடைசி நபர்.. இனிமே ஒரு நடிகர் கூட முதலமைச்சர் ஆக முடியாது..

ஜூன் 22, 2026, 13:38
new assembly

கருணாநிதி கட்டிய புதிய சட்டமன்ற பில்டிங்கை ஜெயலலிதா பல்நோக்கு மருத்துவமனையா மாத்துனாங்க.. இப்ப முட்டுக்காட்டுல கட்டிகிட்டு வர்ற கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை விஜய் புதிய சட்டசபையாக மாத்த போறாரா? புதிய சட்டமன்ற கட்டிடத்தை கருணாநிதி கட்டியும் அது நடக்கல.. புதிய சட்டசபைக்கு ஜெயலலிதா பூஜை மட்டும் போட்டாங்க, ஆனா கட்டுமான பணிகள் நடக்கலை.. விஜய்யாவது மாத்துறாரான்னு பார்ப்போம்.

ஜூன் 22, 2026, 13:13
vijay bussy aadhav

தவெகவுக்கு யார் வேணும்னாலும் வரலாம்.. ஒரு பைசா தரமாட்டோம்.. பதவியும் உடனே கிடைக்காது.. கட்சிக்காக வேலை செய்யுங்க, உங்க வேலையை பார்த்துட்டு எதிர்காலத்துல கொடுப்போம்.. கட்சிக்கு வந்தவுடனே மினிஸ்டர் ஆகிடலாம், மாவட்ட செயலாளர் ஆகிடலாம், வாரிய தலைவர் ஆகிடலாம்ன்னு நினைச்சா, யாரும் வராதீங்க.. ஸ்ட்ரிட்டாக சொன்ன தவெக தலைமை..

ஜூன் 22, 2026, 08:26