ஒரு அரசு நினைச்சா சட்டம் ஒழுங்கை காப்பாத்துறது ஒரு பெரிய வேலையே இல்லைன்னு இப்ப தான் தெரியுது.. 50 வருஷத்துல போலீசை கரெக்டா வேலை வாங்குன ஒரு முதல்வரை பார்க்க முடியலை.. போலீசுக்கு ஒரு அரசும் முழு சுதந்திரம் கொடுக்கலை.. போலீசுக்கு மட்டும் முழு சுதந்திரம் கொடுத்து பாருங்க.. அரசியல்வாதி தலையீடு மட்டும் இல்லாமல் இருந்தா போதும், சட்டவிரோதிங்க காணாமல் போயிடுவாங்க… தவெக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு…மே 21, 2026, 07:25
டாஸ்மாக்கை மூடுனாரு.. ரெளடிங்களை பிடிச்சாரு.. டெண்டர் கமிஷனை கட் பண்ணினாரு.. அம்மா உணவகத்தை சீரமைச்சாரு.. அரசு அதிகாரிகளை சாட்டையை சுழற்றி வேலை வாங்குறாரு.. 10 நாள்ல்ல இவ்வளவு செய்ய முடியுதுன்னா, அடுத்த 5 வருஷத்துல என்னென்ன செய்வாரு? குறை சொல்றவன் பொறாமையில சொல்லிகிட்டே இருக்கட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.. முதல்வர் விஜய்க்கு முழு சப்போர்ட் செய்யும் பொதுமக்கள்..!மே 21, 2026, 07:14
எழும்பூர்ல தோற்றதுக்கு காரணமானவங்ககிட்டயே, ‘ஏன் தோத்தீங்க?’ன்னு கேட்டா, அவங்க உண்மையை சொல்லுவாங்களா? இல்ல, அடுத்த தேர்தல்லையும் தோக்க வைக்கிற பிளானை சொல்லுவாங்களா? சென்னையில மட்டுமில்ல, தமிழகம் முழுவதுமே மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களிச்சுட்டாங்க! அதிகார வர்க்கத்தின் கர்வத்தை கண்டு மக்கள் சலிச்சுப்போய் இருக்காங்க, இதை கண்ணாடியில பார்க்க தயாரா?”மே 19, 2026, 20:17
அரசியல் வேற… பசி வேற! கட்சி எதுவா இருந்தாலும், ஏழை வயிறு நிறையணும்ங்கிறதுதான் தவெக கொள்கை. அம்மா உணவகம் இனி இன்னும் சூப்பரா இயங்கும்! அம்மா உணவகம் வெறும் கட்டிடம் இல்ல… அது ஏழையோட பசியை போக்கும் கோவில்.. அரசியல் பழிவாங்கல் இல்லாம, மக்கள் நலன் காக்கவே இந்த அரசு… இது தளபதி ஆட்சி!மே 19, 2026, 15:30
சென்னை மேயர் உங்க கட்சி ஆளா இருக்கலாம்.. ஆனால் அங்கே வேலை செய்றவங்கள கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உரிமை உண்டு.. இனிமேல் எல்லா ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை.. நேரம் காலம் தெரியாம வேலை பார்த்த காலம் முடிஞ்சது! இனி விரல் ரேகையை தொட்டாத்தான் வேலை தொடங்கும்… ஏமாத்த நினைச்சா, இனி சிஸ்டமே உங்களை அலற வைக்கும்! மாநகராட்சி இனி மக்களுக்கானது, மெத்தனமான அதிகாரிகளுக்கு இடமில்லை..!மே 19, 2026, 14:38
தென்னகம் மட்டும்தான் நம்ம ஏரியான்னு நினைச்சீங்களா? அசாம் வரைக்கும் தடம் பதிச்சிருக்கோம்! 2026-ல தமிழ்நாட்டு கோட்டையை பிடிச்சிட்டோம்.. 2029-ல டெல்லியையும் பிடிப்போம்.. ஸ்டாலின் மாதிரி மோடியையும் வீட்டுக்கு அனுப்புவோம்.. வடக்கே வீசுற அலைக்கு நாங்க அணை போட வரல… அதைவிடப் பெரிய சுனாமியா மாறி, இந்திய அரசியலோட வரைபடத்தையே மாத்தி எழுத வந்திருக்கோம்!மே 19, 2026, 11:30
தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையையும், தொழில்வளம் மிக்க உள்கட்டமைப்பையும் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சர்வதேச தரத்திலான ஒரு பிரம்மாண்ட “துறைமுக நகரமாக” மாற்றியமைக்க தற்போதைய புதிய தவெக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.மே 19, 2026, 11:09
மதுரை இனி தூங்கா நகரம் அல்ல.. 10.30-க்கு அலர்ட் கொடுத்து 11 மணிக்கு கடையை மூட வைக்கிறதுதான் தவெக அரசோட ‘மரண மாஸ்’ அதிரடி!மதுரையில இப்படி ஒரு சட்டம் ஒழுங்கு மாற்றத்தை எவனும் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டீங்க… ஆனா சொன்னதை செஞ்சு காட்டுறதுதான் எங்க சி.எம் விஜய் அண்ணாவோட ஸ்டைல்!மே 19, 2026, 09:47
மாற்றம் வேனும்ன்னு சும்மா எழுத்துல சொன்னவங்க இல்லை தவெகவினர்.. மாற்றத்தை கண்முன்னாடி காட்ட தான் வந்துருக்கோம்.. ஒரு அரசை எப்படி நடத்தனும்.. கமிஷன் இல்லாம எப்படி அரசு வேலைகள் நடக்கனும்ன்னு மற்ற மாநிலங்கள் நம்ம முதல்வர் விஜய்கிட்ட பாடம் கத்துக்கோங்க.. 2031க்குள்ள தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக மாறிவிடும்.. தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர், மலேசியா மாதிரி மாறுவதற்கு இன்னும் கொஞ்ச காலம் தான்.. தவெக தொண்டர்கள் பெருமிதம்…!மே 19, 2026, 08:10
பள்ளிக்கல்வி முதல் தொழில்துறை வரை தினமும் ஆய்வுகள்.. வேகமாக நடைபெறும் அதிரடி நடவடிக்கைகள்.. இனி அரசு ஊழியர்கள் சும்மா வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்ல முடியாது.. சக்கையாக பிழியும் தவெக அரசு.. பொறுப்பாக வேலை பார்க்க, மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் தப்பிக்க முடியும்.. ஓபி அடிக்க நினைச்சா வேலையே பறிபோய்விடும்.. இதுதாண்டா மக்களுக்கான அரசு..!மே 19, 2026, 07:59