திமுகவின் எதிர்காலம் பூஜ்ஜியம்ன்னு பிடிஆர் புரிஞ்சிகிட்டார்.. அதனால தான் அவர் அரசியலை விட்டே விலகிட்டார்.. நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜிங்கிற மாதிரி பிடிஆர் மீண்டும் அமெரிக்கா சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அவருடைய 30000 கோடி ஆடியோ தான் திமுகவின் சரிவுக்கு முதல் புள்ளி.. அப்போதே சுதாரித்து திமுக தனது தவறை உணர்ந்திருந்தால் இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது…மே 21, 2026, 18:30
உங்கள் எதிரி தவறு செய்யும் போது, அவரை ஒருபோதும் குறுக்கிட்டுத் தடுக்காதீர்கள் ; அமைதியாக வேடிக்கை பார்ப்பதே சிறந்த அரசியல். எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்து வெற்றி பெறும் கலை இதுதான்! விஜய்யின் வெற்றிக்கு இதுவே முக்கிய காரணம்.. எதிரி தவறு செய்கிறார்கள் என்று மக்களிடம் கொண்டு சென்றால் மட்டும் போதும், அதற்கான நடவடிக்கையை மக்களே எடுத்துருவாங்க.. நாம் தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை…மே 21, 2026, 17:38
கட்சியை நடத்த சொன்னா அறிவாலயத்தை ‘முதியோர் இல்லம்’ ஆக்கி வச்சிருக்கீங்களே! 70 வயசுக்கு மேலயும் நாற்காலியை புடிச்சுக்கிட்டு தொங்குறதுக்கு பேரு அரசியல் இல்ல… ‘வாக்கிங் ஸ்டிக்’ பசி! ரிட்டையர்ட் ஆகி வீட்ல பேரன் பேத்தியோட விளையாட வேண்டிய வயசுல, இங்க வந்து இன்னும் வேட்புமனு தாக்கல் பண்ணிக்கிட்டு அலையுறீங்க! இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குங்கய்யா…மே 21, 2026, 15:30
சோசியல் மீடியாவை எல்லா கட்சியும் தான் பயன்படுத்துச்சு.. திமுக சோசியல் மீடியாவுக்காக நூற்றுக்கணக்கான கோடி செலவு பண்ணுச்சு.. ஆனால் ரிசல்ட் இல்லையே.. தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் காசு வாங்காம தன்னெழுச்சியா வேலை செஞ்சாங்க.. காசு வாங்கிட்டு வேலை செய்றதுக்கும் தன்னெழுச்சியா வேலை செஞ்சதுக்கும் உள்ள வித்தியாசம் தான் வெற்றியும் தோல்வியும்.. காசு எப்பயும் வெற்றியை தந்திடாது.. இதை திமுக கடைசி வரைக்கும் புரிஞ்சுக்க போறதே இல்லை…மே 21, 2026, 15:19
சென்னை டூ கன்னியாகுமரி… கொங்கு டூ தூத்துக்குடி! தமிழ்நாட்டோட நாலு திசைக்கும் அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு.. இனிமே ஒரு பகுதி மட்டும் ஒளிராது… ஒட்டுமொத்த மாநிலமும் வெளிச்சத்துல மிரள போகுது! கமலியைப் பாரு… விஜயலட்சுமியைப் பாரு… ஜெகதீஸ்வரியைப் பாரு! அமைச்சரவையின் பெண் சிங்கங்கள்… தப்பு பண்ண நினைக்கிற பெண் சிங்கங்கள் என்ன செய்யும் தெரியுமா?மே 21, 2026, 14:42
ஜனங்களோட வரிப்பணத்துல 2,000 கோடிக்கு போலி எஸ்டிமேட் போட்டு கொள்ளையடிக்கப் பார்த்தீங்களா? நீங்க போட்டது கள்ளக் கணக்கு… இந்த விஜய் காட்டுறதுதான்டா உண்மையான ஆக்ஷன் கணக்கு! ஃபைல் குளோஸ்… உங்க ஆட்டமும் குளோஸ்!மே 21, 2026, 11:15
சூரிய மின்சாரம் மட்டும் சக்சஸ் ஆயிருச்சுன்னா, 200 யூனிட் என்ன, 500 யூனிட் கூட இலவசம் தரலாம்.. இந்தியாவில் சூரிய மின்சாரம் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் தான் குறைவு.. சூரிய மின்சாரம் வந்துவிட்டால், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்க முடியாது, எனவே கடந்த ஆட்சியாளர்கள் தடுத்ததாக தகவல்.. இனிமேல் தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்சாரத்தில் ஒளிரும்மே 21, 2026, 11:02
முதலமைச்சர் சீட் எனக்கு கிடைச்ச சிம்மாசனம் இல்ல… என் ஜனங்களுக்கு வேலை செய்ய கிடைச்ச ஒரு வெறும் நாற்காலி! நான் சாதாரண டிரைவர்கிட்டயும் பர்மிஷன் கேட்பேன்… ஆனா தப்பு பண்ற அதிகாரிகிட்ட ஆக்ஷன் மட்டும்தான் எடுப்பேன்! தமிழ்நாடு 50 வருஷம் கழிச்சி இப்பதான் சரியான பாதையில போயிகிட்டு இருக்குது.. இனி பொற்கால ஆட்சி தான்..மே 21, 2026, 07:49
ஒரு அரசு நினைச்சா சட்டம் ஒழுங்கை காப்பாத்துறது ஒரு பெரிய வேலையே இல்லைன்னு இப்ப தான் தெரியுது.. 50 வருஷத்துல போலீசை கரெக்டா வேலை வாங்குன ஒரு முதல்வரை பார்க்க முடியலை.. போலீசுக்கு ஒரு அரசும் முழு சுதந்திரம் கொடுக்கலை.. போலீசுக்கு மட்டும் முழு சுதந்திரம் கொடுத்து பாருங்க.. அரசியல்வாதி தலையீடு மட்டும் இல்லாமல் இருந்தா போதும், சட்டவிரோதிங்க காணாமல் போயிடுவாங்க… தவெக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு…மே 21, 2026, 07:25
டாஸ்மாக்கை மூடுனாரு.. ரெளடிங்களை பிடிச்சாரு.. டெண்டர் கமிஷனை கட் பண்ணினாரு.. அம்மா உணவகத்தை சீரமைச்சாரு.. அரசு அதிகாரிகளை சாட்டையை சுழற்றி வேலை வாங்குறாரு.. 10 நாள்ல்ல இவ்வளவு செய்ய முடியுதுன்னா, அடுத்த 5 வருஷத்துல என்னென்ன செய்வாரு? குறை சொல்றவன் பொறாமையில சொல்லிகிட்டே இருக்கட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.. முதல்வர் விஜய்க்கு முழு சப்போர்ட் செய்யும் பொதுமக்கள்..!மே 21, 2026, 07:14