விஜய் அடுத்த அஞ்சு வருஷம் மீடியாவை சந்திக்க மாட்டார்.. முடிந்தால் மீடியா விஜய்யை தவிர்த்து பாருங்க.. நடுநிலை மீடியா என்பது இந்தியாவிலேயே இல்லை.. பேட்டி கொடுப்பவரை அவமதித்து அனுப்பும் பாணி தான் இங்கு அதிகம்.. விஜய்காந்த் பேட்டி கொடுத்து கொடுத்துதான் பேரை கெடுத்து கொண்டார்.. விஜய்யிடம் இருந்து எந்த பத்திரிகையும் பேட்டி வாங்கிவிட முடியாது..மே 25, 2026, 11:45
திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுகிறாரா? ஜெயித்தால் துணை முதல்வர் பதவியா? விசிகவை நிரந்தரமாக கூட்டணியில் வைக்க விஜய் போடும் திட்டமா? பதவியும் கிடைக்குது, மரியாதையும் கிடைக்குது தவெகவில்.. இது ரெண்டும் திமுக கூட்டணியில் இல்லையே.. மாற்றி யோசிக்கிறாரா திருமாவளவன்?மே 25, 2026, 11:13
திமுக கூட்டணி இனி வேண்டாம்ன்னு விசிக முடிவே பண்ணிருச்சு? வேங்கை வயல் பிரச்சனையில் இருந்து பல பிரச்சனைகளில் திமுக நடவடிக்கை சரியில்லை.. தொகுதி உடன்பாட்டிலும் சிக்கல்.. காட்டுமன்னார் கோவிலில் திருமா போட்டியிடுவதை வலுக்கட்டாயமாக தடுத்தனர்.. அவர் போட்டியிட்டு இருந்தால் இன்று அவர் அமைச்சர்.. விசிக வளர்ச்சியை திமுக கொஞ்சம் கூட ரசிக்கவில்லை.. இனிமேலும் திமுக கூட்டணியில் இருந்தால் கட்சியையே அழிச்சிடுவாங்க.. பாஜக எதிர்ப்புக்காக எவ்வளவு தான் பொறுத்திருப்பது.. முடிவு செய்துவிட்டாரா திருமா?மே 25, 2026, 08:11
திமுக தப்பு மேல தப்பு செய்துகிட்டே இருக்குது.. இப்ப கூட ஆட்சியை நடத்த நல்லாசி, நல்லாசோனை தருகிறோம் என்று பெருந்தன்மையாக சொல்லாமல், ஆட்சி சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்று சபிக்கிறார்கள்.. இவர்கள் இருக்கும் வரை தவெகவுக்கு பிரச்சனையே இல்லை.. ஒரு நல்ல ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி இருந்தால் தான் ஆளுங்கட்சிக்கு சிரமம் ஏற்படும்.. இப்படிப்பட்ட எதிர்க்கட்சி இருந்தால் அடுத்த தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப ஈஸி.. கருணாநிதி இந்நேரம் இருந்திருந்தால் ஒரு ஆறு மாதம் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்.. எப்போது தப்பு நடக்குதோ, அப்போது விழித்து கொள்வார்…மே 25, 2026, 07:43
நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு செய்த கனிம வளத்துறை அமைச்சர் பிரபு.. லாரிகளில் இனி 1 கிராம் கூட கனிம வளத்தை சட்டவிரோதமாக கடத்த முடியாது.. ஏன்னா இது லஞ்சம் வாங்கிவிட்டு கண்டுக்காமல் இருக்கும் திராவிட மாடல் அரசு அல்ல.. லஞ்சத்தை ஒழிக்க வந்த மக்கள் மாடல் அரசு.. கனிம வளம் என்பது மக்களோட சொத்து… அதைத் திருடுறது ஒருத்தனோட தொழில் இல்லை, அது நாட்டுக்கு எதிரா செய்ற துரோகம். அந்த துரோகத்தை நள்ளிரவுல தடுத்து நிறுத்துறது தான் நம்மளோட முதல் வேலை..!மே 25, 2026, 07:18
ஒரு மத்திய அமைச்சரை ஒரு கடைநிலையில் உள்ள பெண் தோற்கடித்தார்.. வெற்றி பெற்ற பின்னும் நான் யாரையும் தோற்கடிக்கலை, மக்கள் என்னை ஜெயிக்க வச்சிருக்காங்கன்னு சொன்னார்.. நான் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.. நான் பட்ட கஷ்டம் வேறு யாரும் படக்கூடாதுன்னு அரசியலுக்கு வந்திருக்கேன்னு சொன்னார்.. அவருடைய பேச்சுக்காகவே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் முதல்வர் விஜய்.. அவர் தான் அமைச்சர் கமலி.. ஜெயிச்சதும் ஆட்டிடியூட் காட்றவங்க மத்தியில் எளிமையாக இருந்த கமலி இன்னும் மேலே மேலே வருவார்…மே 24, 2026, 21:30
வட இந்தியர்களும் விஜய்யை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க… யார்றா இவர் அதிமுகவையும், திமுகவையும் ஒரே நேரத்தில தோற்கடிச்சிருக்காரு? எப்படி 15 நாளில் டோட்டல் அரசாங்கத்தை ஊழல் இல்லாம மாத்தினாரு? எப்படி எல்லா எம்.எல்.ஏக்களும் அவங்கவங்க தொகுதியிலேயே ரெய்டு விட்டுகிட்டு இருக்காங்க.. இது உண்மையில் இந்தியா தானா? இப்படிப்பட்ட ஒருவர் நம்ம மாநிலத்துக்கு முதல்வரானா நல்லாயிருக்குமேன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டங்க.. போற போக்க பார்த்தால் விஜய்யை பிரதமர் ஆக்காமல் விடமாட்டாங்க போல…மே 24, 2026, 21:11
எதிரி யாருங்கிறதை தேர்தலுக்கு முன் விஜய் பிக்ஸ் பண்ணினாரு.. தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு முழங்கினாரு.. ஆனால் திமுகவோ எங்களுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி.. எங்களுக்கும் மோடிக்கும் தான் போட்டின்னு சம்மந்தமே இல்லாம உளருச்சு.. இனிமேல் திமுகவை எதிரியா கூட விஜய் மதிக்க மாட்டாரு.. அடுத்த தேர்தல்ல தவெகவுக்கு போட்டியே இருக்காது.. அப்படியே இருந்தாலும் அது திமுகவா இருக்காது.. இதுதான் யதார்த்தம்…மே 24, 2026, 18:15
கூட்டணி கட்சிகளை நம்புனது போதும்.. இனிமேல் எந்த கட்சியும் கூட்டணிக்கு வேண்டாம்.. 234 தொகுதியிலும் உதயசூரியனே நிக்கட்டும்.. நாமே களத்தில் இறங்கி வேலை செய்வோம்.. தொண்டர்களும் குஷியா வேலை செய்வாங்க.. யார் யாரையோ ஜெயிக்க வச்ச நம்ம தொண்டர்கள் நம்ம வேட்பாளரை ஜெயிக்க வைக்க மாட்டாங்களா? நான் சொல்றதை இனியாவது கேளுங்க.. முக ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்தாரா கனிமொழி?மே 24, 2026, 18:01
விஜய் ஆட்சி இப்ப உடனே கவிழக்கூடாதுன்னு விஜய்யை விட திமுகவும், அதிமுகவும் பயப்படுவாங்க.. விஜய் ஆட்சி கவிழ்க்கப்பட்டால், அல்லது தானாக கவிழ்ந்தால் இன்னொரு தேர்தலை தவிர வேறு வழியில்லை.. தேர்தல் வந்தால் அதிமுகவும் திமுகவும் குளோஸ்.. விஜய் ஈசியா 200 அடிச்சிடுவார்.. அப்புறம் எதிர்க்கட்சியா கூட உட்கார முடியாது.. ஒரு ரெண்டு மூனு வருஷம் ஆகட்டும்.. முடிஞ்ச வரைக்கும் விஜய் பேரை கெடுக்க முயற்சி செய்வோம், அப்புறம் தேர்தல் வந்தால் சமாளிக்கலாம்.. இதுதான் திமுக, அதிமுவோட எண்ணம்…!மே 24, 2026, 17:45