விஜய்யை இனி யாராலும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது.. விஜய் இல்லாமல் இன்னும் 25 வருடங்களுக்கு தமிழக அரசியல் இல்லை.. திமுக, அதிமுகவுக்கு தான் பெரும் சேதாரம்.. அண்ணாமலை, விஜய், உதயநிதி என்ற ரேஸ் ஏற்பட்டால் கூட விஜய் தான் முதலிடம் வர வாய்ப்பு.. விஜய் மக்கள் செல்வாக்குக்கு முன் அண்ணாமலையின் அறிவார்ந்த அரசியல் பின் தங்கவே வாய்ப்பு.. இந்த ரெண்டு பேருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னாமாக போகிறார் விஜய்? அரசியல் விமர்சகர்கள் கருத்து…ஜூன் 8, 2026, 08:24
அண்ணாமலை அரசியல் வேற மாதிரி இருக்கும்.. திமுக, அதிமுகவே திணறியது.. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று திமுக விரும்பியது.. அண்ணாமலை சீட் கொடுக்க வேண்டாம் என அதிமுக அழுத்தம் கொடுத்தது.. அண்ணாமலையை எதிர்க்க திமுக, அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை, அவரை ஓரம்கட்ட வேண்டும் என்று தான் பார்த்தார்கள்.. ஆனாலும் அண்ணாமலை வீறுகொண்டு எழுந்து வருகிறார்.. விஜய் – அண்ணாமலை மோதல் வந்தால் தான் என்ன ரிசல்ட் என்று தெரிய வரும்.. அதிமுக, திமுக நமது பொது எதிரி என இருவரும் கூட்டணி வைப்பார்களா? அல்லது இருவரும் ஒருவருக்கொருவர் மோதுவார்களா? காலம் தான் பதில் சொல்லனும்…ஜூன் 8, 2026, 07:45
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக திமுக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.. விசிக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், இடதுசாரிகள் கூட்டணியில் இல்லை.. மதிமுகவின் எம்.எல்.ஏக்கள் உதயசூரியனில் போட்டியிட்டதால் போக முடியாத நிலை.. தேமுதிக இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.. இப்படி திமுக தனிமைப்படுத்தப்பட்டது வரலாற்றிலே இல்லை.. திமுகவுடன் கூட்டணி சேர போட்டி போட்ட கட்சிகள் இன்று போட்டி போட்டு வெளியேறுகின்றன.. திமுகவை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் ஸ்டாலின்.. உடன்பிறப்புகள் ஆதங்கம்…ஜூன் 7, 2026, 17:50
2 சீட் ஜெயிச்சாலும் சொந்த சின்னத்தில ஜெயிச்சவங்க இன்னிக்கு அமைச்சர் ஆகிட்டாங்க.. 3 எம்.எல்.ஏ வச்சிருக்கிற மதிமுக, உதயசூரியன் சின்னத்துல நின்னதுனால நட்டாத்துல நிக்குது.. இன்னொரு கட்சி சின்னத்துல போட்டியிடுவதற்கு எதுக்கு அரசியல் கட்சி நடத்தனும்.. விசிக, முஸ்லீம் லீக்கிற்கு இருந்த தைரியம் வைகோவுக்கு இல்லையா? பம்பரம் சின்னத்தில் நின்றிருந்தால் இன்று மதிமுகவிலும் ஒரு அமைச்சர் இருந்திருப்பார்… இனிமேல் புலம்பி என்ன பயன்?ஜூன் 7, 2026, 17:14
விஜய் வெற்றி பெற்றது இலுமினாட்டிகளின் வேலையா? 40 நிமிட வீடியோவால் பரபரப்பு.. ஆனால் விஜய் பின்னாடி இல்லுமினாட்டியும் இல்ல, எந்த ரகசிய ப்ளூ பிரிண்ட்டும் இல்லடா! அங்க நிற்குறது ‘மக்கள் சக்தி’… அவங்க போட்ட ஓட்டு! அதை ஏத்துக்க முடியாம மர்மக் கதை கட்டிட்டு திரியாதீங்கடா! எதார்த்தமா நடக்குற சம்பவங்களை எல்லாம் ஒன்னா கோர்த்து நீங்க போடுற முடிச்சு, உங்களோட கற்பனையே தவிர உண்மை ஆகிடாதுடா!ஜூன் 7, 2026, 12:18
விஜய்யை இப்போதைக்கு அண்ணாமலை தொட மாட்டார்.. மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவனை விமர்சிப்பது தேன் கூட்டில் கல் எறிவது போல்.. அண்ணாமலையின் முதல் டார்கெட் திமுக தான்.. ஒருவேளை 2029ல் திமுக + பாஜக கூட்டணி வந்தால் வச்சு செய்வார்.. ரெண்டாவது டார்கெட் எடப்பாடி.. அவரால் தான் தமிழக பாஜக நாசமாக போனது.. ஈபிஎஸ் சொன்னதை கேட்டு தான் தமிழக பாஜகவும், டெல்லி பாஜகவும் கேட்டு ஏமாந்தது… கடைசியாக தான் அண்ணாமலையின் டார்கெட் விஜய்..ஜூன் 7, 2026, 11:31
Annamalai is very danger.. அண்ணாமலையை சமாளிக்க திமுக, அதிமுகவால் கூட முடியவில்லை.. அதனால் அவரை பதவியில் இருந்து தூக்கினார்கள்.. தனிக்கட்சி ஆரம்பித்து எழுச்சி அடைந்தால் விஜய்யால் அவரை சமாளிக்கவே முடியாது.. அதிமுகவை பிடிக்காதவர்கள், திமுகவை பிடிக்காதவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், நடுநிலையாளர்கள், இளைஞர்கள், பெண்கள் என 20% வாக்கை அண்ணாமலை பெற்றுவிடுவார்.. ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் நிச்சயம் ஆட்சியையும் பிடித்துவிடுவார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு…ஜூன் 7, 2026, 08:18
விஜய் vs அண்ணாமலை vs கனிமொழி இந்த மும்முனை போட்டி தான் தமிழகத்தின் எதிர்கால அரசியல்.. கலைஞர் திமுக என்ற கட்சியை கனிமொழி ஆரம்பித்தால், விஜய்க்கும் அண்ணாமலைக்கும் சமமான சவால் இருக்கும்.. டெல்லி அரசியலை அறிந்தவர், பத்திரிகையாளர், திறமையாக பேசக்கூடியவர், பெரிய அளவில் ஊழல் புகார் இல்லை.. டீசண்ட் அரசியல் செய்பவர்.. விஜய், அண்ணாமலைக்கு சமமாக கனிமொழிக்கு இளைஞர்கள் மக்கள் ஆதரவு இருக்குமா?ஜூன் 7, 2026, 07:59
எங்கப்பாவோட கட்சியில் எனக்கும் பங்கு உண்டு.. என்னை செயல் தலைவராக போடுங்கள்.. ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாரா கனிமொழி? திமுகவை உடைக்கும் சக்தி கனிமொழி ஒருவர் கிட்ட மட்டுமே இருக்குது.. தந்தை – மகன் – மருமகன் என்ற ரீதியில் கட்சி போனால், கனிமொழி தனது உண்மையான சொரூபத்தை காட்டுவார்.. கனிமொழி வைகோ மாதிரி கிடையாது, கருணாநிதியின் மகள்.. எனவே அவர் திமுகவை உடைத்தால் எம்ஜிஆர் உடைத்தது போல் சிதறும்.. குழப்பத்தில் ஸ்டாலின்? பிரகாஷ் எம் சுவாமி கணிப்பு..ஜூன் 7, 2026, 07:40
டெண்டர் ஃபைல், பினான்சியல் ட்ரான்சாக்ஷன், பல நூறு கோடி நிலக்கரி கொள்முதல் ஆதாரங்கள்… கரெக்டா எதை அழிக்கணும்னு பிளான் பண்ணி கை வச்சிருக்கீங்க! ஆனா நீங்க கரியை திருடினாலும், அந்த கறையை உங்க கையில இருந்து ஒருபோதும் அழிக்க முடியாது… இந்த விஜய் கவர்மெண்ட்ல எவனும் தப்பிக்க முடியாது!ஜூன் 6, 2026, 22:32