விஜய் கட்சிக்கு போனால் ரஜினி கோவிச்சுகிடுவார்.. அண்ணாமலை பக்கம் போய் நோ யூஸ்.. அரசியலுக்கு வர்றேன்னு வேற மக்கள்கிட்ட வாய்விட்டாச்சு.. அதனால் முடிவை மக்கள்கிட்ட விட்டுட்டேன்னு சொல்லி ஒதுங்குகிறார் ராகவா லாரன்ஸ்.. தெருநாய் பிரச்சனை வேற ஊடகத்தில முத்திகிச்சு.. இதுக்கு மேலும் விஜய்யும் லாரன்ஸை கட்சியில் சேர்க்க யோசிப்பார்.. அப்படியே சேர்த்தாலும் உடனே பதவி தரமாட்டார்.. பேசாம நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி மாதிரி, நீங்க சினிமாவுக்கே போயிருங்க லாரன்ஸ்…ஜூன் 15, 2026, 22:12
மீடியாவை கடைசி வரை பார்க்காதீங்க.. எதிர்க்கட்சி அரசியல்வாதிங்களின் குற்றச்சாட்டுக்கு பதிலே சொல்லாதீங்க.. சோஷியல் மீடியாவுல வர்ற வதந்திகளை கண்டுக்கவே வேண்டாம்… மக்கள் நலனை கண்ணும் கருத்துமா செய்யுங்க.. மீடியா, அரசியல்வாதிகள், சோஷியல் மீடியாக்காரங்களை நாங்க பார்த்துக்கிறோம்.. விஜய்க்கு உறுதிமொழி அளித்துவிட்டு மீண்டும் களத்தில் இறங்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்….ஜூன் 15, 2026, 17:17
அறப்போர் இயக்கம் ஒரு முடிவோட இருக்காங்க.. திமுக, அதிமுகவை விஜய் ஒழிப்பாரோ இல்லையோ, அறப்போர் இயக்கம் ஒழிச்சிடும்.. அதிமுக ஆட்சியில் திமுக மீது கொடுத்த புகாரை கண்டுக்கலை.. திமுக ஆட்சியில அதிமுக மீது கொடுத்த புகார்களை கண்டுக்கலை.. விஜய் சொன்ன மாதிரி ரெண்டு பேரும் கூட்டணிதான்.. இப்ப தவெக ஆட்சியில அறப்போர் இயக்கம் கொடுக்குற புகாரெல்லாம் விசாரணைக்கு வருது.. இனிமேல் டப்பா டான்ஸ் ஆடிடும்…ஜூன் 15, 2026, 16:54
ராகவா லாரன்ஸ்.. நீங்க சொன்ன தெருநாய் விஷயத்தை எப்படி கோர்த்துவிட்டுட்டாங்க பார்த்தீங்களா? இதுதான் தமிழ்நாட்டோட ஊடகம்.. இதுதான் தமிழ்நாட்டோட அரசியல்.. இப்ப புரியுதா எதுக்கு விஜய் மீடியாவையே பார்க்காம இருக்காருன்னு.. தயவுசெய்து அரசியலுக்கு வராதீங்க.. வந்தா இன்னும் மோசமா நீங்க சொல்றதை எல்லாம் திரிச்சு பரப்புவாங்க.. நீங்க இத்தனை வருஷம் வாங்குன நல்ல பெயரை ஒரே நிமிஷத்துல காலியாக்கிடுவாங்க..ஜூன் 15, 2026, 14:37
தேர்தல் அறிக்கையில வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியா கொடுக்கலை.. ஒவ்வொரு வாக்குறுதிக்கும் ஒவ்வொரு பிளான் இருக்குது.. மத்திய அரசோட மோதாம, அதே நேரத்துல கொள்கையையும் விட்டுக்கொடுக்காம எப்படி காசு வாங்குறேன்னு மட்டும் பாருங்க.. தவெகவோட நோக்கமே இளைஞர்களுக்காக செலவு செய்றதுதான்.. அது செலவு அல்ல.. முதலீடு.. இளைஞர்கள் வளர்ந்தால் மாநிலமும் வளரும் நாடும் வளரும்.. இதைத்தான் நிதி ஆயோக் கூட்டத்துல எல்லோருக்கும் நம்ம முதல்வர் புரிய வச்சாரு…ஜூன் 15, 2026, 11:34
ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… உள்ளூர் எதிரிகளை ஒழிச்சி கட்டியாச்சு.. மிச்சம் மீதி இருந்தாலும் அவர்களால் கூப்பாடு போடத்தான் முடியுமே தவிர ஒன்னும் செய்ய முடியாது.. அடுத்த டார்கெட் டெல்லி தான்.. அப்பாயின்மெண்ட் கொடுக்காத அமித்ஷா தான் அடுத்த டார்கெட்.. எப்படி மறுபடியும் ஆட்சிக்கு வருவீங்கன்னு பார்க்கலாம்.. 60 வருஷ கட்சியையே, 75 வருஷ கட்சிகளையே ஒரே நேரத்துல வீட்டுக்கு அனுப்பியவங்க நாங்க.. பாஜகவை வீட்டுக்கு அனுப்புறது ஒன்னும் பெரிய விஷயம்.. ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்…ஜூன் 15, 2026, 10:08
அதிமுக கட்சியையே காப்பாத்த முடியாம தவிக்குது.. திமுக கூட்டணியை தக்க வைக்க முடியாமல் தவிக்குது.. தவெக தமிழ்நாட்டோட நிறுத்திகிட்டா நல்லாயிருக்கும், டெல்லிக்கும் வந்துருமோங்கிற பயத்துல இருக்குது.. இது எல்லாம் ஒரே ஒரு மையப்புள்ளி விஜய்.. சினிமாவுல எப்படி ரஜினி, கமலை ஒரே நேரத்தில் ஓரங்கட்டினாரோ, அதேபோல் அரசியல்ல திமுக, அதிமுகவையும் ஓரங்கட்டிட்டாரு.. அடுத்த டார்கெட் டெல்லி தான்.. ஒன்னும் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கனும், அல்லது விஜய்யே பிரதமர் ஆகனும்.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்…ஜூன் 15, 2026, 08:02
சென்னைக்கு ஒரு விமான நிலையம் போதும்.. மற்ற நகரங்களுக்கும் விமான நிலையம் வேண்டும்.. தஞ்சாவூர் விமான நிலைய வேலையை 3 வருஷமா முடக்கிவச்சிருந்தது திராவிட மாடல் அரசு.. அதை ஒரே மாதத்தில் அனுமதி வாங்கி வேலையை ஆரம்பிக்க போகுது மக்கள் மாடல் அரசு.. இனி தஞ்சாவூருக்கு பறந்து போகலாம்.. தஞ்சாவூர் மட்டுமில்ல, இன்னும் பல நகரங்களுக்கும் விமான நிலையம் கொண்டு வருவோம்.. ஏன்னா இது விஜய்யோட தவெக அரசு…ஜூன் 15, 2026, 07:45
வைகை ஆற்றை 60 வருஷமா கவனிக்காமல் விட்ட திராவிட கட்சிகள்.. மதுரை மண்டல விவசாயிகளுக்கே சோறு போட்ட வைகை ஆற்றில் தண்ணீரை எப்பவாவது தான் கண்ணுல பாக்குறாங்க.. இனிமேல் அப்படி இருக்காது.. பாண்டியன் மன்னன் காலத்தை போல வைகையில எப்பவும் தண்ணீர் இருக்கும்.. திட்டங்கள் தயாராகுது.. பட்ஜெட்டும் போட்டாச்சு.. வைகையில் இனி 365 நாளும் போட் விடலாம்…ஜூன் 14, 2026, 21:45
அதிமுக-வோட கோட்டையா இருந்த ஏரியாக்கள்ல இருந்து விஜயபாஸ்கர், பாஸ்கரன்னு மாஜி அமைச்சர்களும்… பாமக கோட்டையில இருந்து அருள் மாதிரி முன்னாள் எம்எல்ஏ-க்களும் இப்போ தவெக-வை நோக்கி படையெடுக்குறாங்க? இன்னொரு சென்னை அதிமுக பிரபலமும் தவெகவில் சரண்டர்.. எடப்பாடியை தவிர மத்த எல்லாரும் தவெகவிலும் திமுகவிலும் இணைகிறார்களா? எடப்பாடியும் திமுகவில போய் இணைஞ்சிருங்க.. அதிமுக கதையை முடிச்சிடலாம்..ஜூன் 14, 2026, 21:33