அதிமுக-வோட கோட்டையா இருந்த ஏரியாக்கள்ல இருந்து விஜயபாஸ்கர், பாஸ்கரன்னு மாஜி அமைச்சர்களும்… பாமக கோட்டையில இருந்து அருள் மாதிரி முன்னாள் எம்எல்ஏ-க்களும் இப்போ தவெக-வை நோக்கி படையெடுக்குறாங்க? இன்னொரு சென்னை அதிமுக பிரபலமும் தவெகவில் சரண்டர்.. எடப்பாடியை தவிர மத்த எல்லாரும் தவெகவிலும் திமுகவிலும் இணைகிறார்களா? எடப்பாடியும் திமுகவில போய் இணைஞ்சிருங்க.. அதிமுக கதையை முடிச்சிடலாம்..ஜூன் 14, 2026, 21:33
ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் உடன் கூட்டணி வேண்டாம்ன்னு மிரட்டினா பயந்துடுற ஆளா நான்.. காங்கிரஸ் உடனும் சேருவேன், இந்தியா கூட்டணியிலும் சேருவேன்.. உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க.. பாஜக மேலிட மிரட்டலையும் மீறி துணிந்து முடிவெடுத்த முதல்வர் விஜய்..ஜூன் 14, 2026, 18:52
விஜய் சினிமாவுல நடிக்கும்போது தியேட்டர் ஹவுஸ்புல்.. அவர் அரசியலுக்கு வந்தபிறகு பனையூர் அலுவலகம் ஹவுஸ்புல்.. மாற்று கட்சியில் இருந்து ஆயிரக்கணக்கில் தவெகவுக்கு வந்து குவியும் பிரபலங்கள்.. இப்படியே போனா 25 வருஷத்துக்கு விஜய்யை யாரும் அசைக்க முடியாது.. அதிமுக காலியாகிருச்சு.. திமுக கூட்டணி கட்சிகளை இழந்து ஜீரோவாகிடுச்சு.. அரசியலிலும் நம்பர் ஒன் நம்ம தளபதி தான்…ஜூன் 14, 2026, 14:52
அரசு கேபிள்ல்ல ஏன் ஒருசில குறிப்பிட்ட சேனல்கள் கட் ஆகுது.. மர்மத்தை கண்டுபிடித்த தவெக அரசு.. மொத்தமாக க்ளீன் செய்யும் தொழில்நுட்ப வல்லுனர்கள்.. வட இந்திய நிறுவனத்தின் சேட்டை கண்டுபிடிப்பு.. இதற்கு மூலகாரணமே அதிமுகவும் திமுகவும் தான்.. இனிமேல் சேனலை கட் பண்ணுங்க பார்ப்போம்..ஜூன் 14, 2026, 11:50
காங்கிரஸ் நிலைமை தான் அதிமுகவுக்கு… 67ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதன்பின்னர் ஆட்சிக்கே வரமுடியவில்லை.. ரெண்டு திராவிட கட்சிகளின் மீது மாறி மாறி சவாரி செய்தது.. அதேபோல் 2021ல் ஆட்சியை இழந்த அதிமுக இனி ஆட்சிக்கு வர வழியே இல்லை.. ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து அவங்க கொடுக்குற அஞ்சோ, பத்தோ சீட்டை வாங்கிகிட்டு கட்சியை நடத்த வேண்டிய நிலை.. இதை யாரும் எதிர்பார்க்கலை…ஜூன் 14, 2026, 10:56
எங்களால் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையில் இருந்து விலக முடியும்.. ஆட்சிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெற முடியும்… தவெக ஆட்சியில் பங்கு பெற்றதால் தவெகவுடன் கூட்டணி என்று அர்த்தமல்ல.. நாங்கள் ஆதரவு கொடுத்தோம், அதற்காக ஒரு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள்.. அதற்காக அரசியல் கூட்டணி என்று அர்த்தம் அல்ல.. திருமாவளவன் பேட்டி.. சிஎம் விஜய் சார்.. இடைத்தேர்தல்ல அஞ்சையும் ஜெயிச்சு ஆட்சியை காப்பாத்திக்கோங்க.. இவங்களை எல்லாம் நம்ப முடியாது.. அரசியல் விமர்சகர்கள் கருத்து.. அஞ்சையும் ஜெயிச்சா 112.. காங்கிரஸ், இடதுசாரிகள் சேர்ந்தால் 119.. அவ்வளவு தான்..ஜூன் 14, 2026, 08:03
ராகவா லாரன்சு.. தவெகவுக்கு வர்றதா இருந்தா தாராளமா வா.. ஆனால் வந்தவுடனே திருச்சி கிழக்கு கிடைக்கும்.. ஜெயிச்சவுடனே அமைச்சர் பதவி கிடைக்குங்கிற கனவுல வரக்கூடாது.. ஒரு 5 வருஷம் எந்த பதவியும் கிடையாது.. கட்சிக்காக வேலை செய்.. 2031ல்ல பார்க்கலாம்.. இஷ்டம்ன்னா வரலாம், இல்லாட்டி உங்க வழியை பார்த்துகிட்டு போய்கிட்டே இருக்கலாம்.. கறாராக கூறிவிட்டாரா விஜய்ஜூன் 13, 2026, 18:45
இனிமேல் தனியா நின்னு தவெகவை ஜெயிக்க முடியாது.. அதிமுகவை உடைச்சிட வேண்டியதுதான்.. தங்கமணி, விஜயபாஸ்கர், வேலுமணி உள்பட 6 பேருக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக.. ஏற்கனவே திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பாதி பேரு அதிமுகவில் இருந்து வந்தவர்கள்.. இதுக்கு பேசாம அதிமுகவையும் திமுகவையும் ஒண்ணா இணைச்சிடலாமே..ஜூன் 13, 2026, 18:05
விஜய்க்கு காங்கிரஸோ அல்லது மற்ற கூட்டணி கட்சிகளோ தேவையே இல்லை.. அடுத்த தேர்தலில் கண்டிப்பாக 118க்கு மேல் கொடுத்துவிடுவார்கள்.. கூட்டணி கட்சிகளுக்கு தான் விஜய் தேவை.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் இனி திமுக கூட்டணிக்கு போக முடியாது.. அப்படியே போனாலும் நல்லாட்சி நடத்தும் தவெகவை தோற்கடிக்கும் சக்தி திமுகவுக்கு கிடையாது.. மொத்தத்தில் விஜய் ஒரு அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டன….ஜூன் 13, 2026, 13:51
ஜால்ரா போடும் சினிமாக்காரங்களை தூண்டிவிட்டு ஆட்சிக்கு எதிராக பேச வைக்கும் இழிவான செயலை செய்யும் திமுக… இப்படி பேச வைத்தால் தங்களுக்கு தான் பாதிப்பு என்ற குறைந்தபட்ச அறிவு கூட திமுக முன்னணி தலைவர்களுக்கு இல்லையா? ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இப்படி ஒப்பாரி வைப்பார்கள்… அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திமுகவை ஸ்டாலின், உதயநிதி முடித்து வைத்துவிடுவார் போல் தெரியுது.. அரசியல் விமர்சகர்கள் ஆதங்கம்…ஜூன் 13, 2026, 11:17