அஜீத்தால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்த நாயகி.. நடிச்ச படமெல்லாம் ஹிட் தான்

இன்று திரையுலகில் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அழகு பார்த்த கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்தபடியாக அந்தப் பெருமை நடிகர் அஜீத்குமாருக்கே சாரும். எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் விஜய், விஷ்ணுவர்தன், சிவா, சரண் போன்ற இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அவர்களை தமிழ் சினிமாவில் ஹிட் இயக்குநர்கள் வரிசையில் நிலை நிறுத்தியவர் அஜீத்.

இயக்குநர்கள் மட்டுமல்லாமல் ஹீரோயின்களின் திரையுலக திருப்புமுனைக்கும் அஜீத் உதவியிருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லையா? காதல் கோட்டை படத்தை மறக்காத 90’s கிட்ஸ்களே கிடையாது. அதுவரை வந்த காதல் படங்களுக்கெல்லாம் காதல் கோட்டை முற்றுப்புள்ளி வைத்து தமிழ்சினிமாவின் இலக்கணத்தை உடைத்தது. மோதலில் உருவாகும் காதல் என்றில்லாமல் பார்க்காமலே வெறும் கடிதங்கள் மூலம் காதல் என்ற புது இலக்கணத்தை வகுத்த படம் அது.

இயக்குநர் அகத்தியனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த இப்படம் A,B,C என அனைத்து சென்டர்களிலும் கல்லா கட்டியது. தேவாவின் இசையில் நலம் நலமறிய ஆவல் என்ற பாடல் பட்டிதொட்டிகளில் எங்கும் ஹிட் அடித்தது. மேலும் இப்படத்தில் நாயகனும், நாயகியும் சந்திக்கும் காட்சிகள் மிக மிக குறைவு. ஆனாலும் படம் முழுக்க லவ் மூடிலேயே கொண்டு சென்றிருப்பார் இயக்குநர்.

சூர்யாவுக்கு 43, ஜி.வி.பி-க்கு 100, ‘தீ‘ யாய் பறக்கப் போகும் பாடல்கள் : புறநானூறு அப்டேட்

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க யாரை அணுகலாம் என முயற்சி செய்து கொண்டிருக்கையில், அப்போது தொட்டாச்சிணுங்கி படத்தில் நடித்த தேவயானியின் முகம் ஞாபகம் வர இயக்குநர் அகத்தியன் அதை அஜீத்திடம் கேட்டிருக்கிறார். ஏனெனில் மக்களை அழ வைக்கக் கூடிய காட்சிகளில் தேவயானி மிகச் சிறப்பாக நடிப்பார் என்பதாலும், மேலும் இந்தக் கதைக்கு சாந்தமான முகம் தேவைப்பட்டதாலும் அவரை இயக்குநர் தேர்ந்தெடுக்க உடனே அஜீத்தும் ஓ.கே. சொல்லியிருக்கிறார்.

ஏனெனில் அஜீத்துக்கும் தேவயானியின் முகம்தான் முதலில் ஞாபக்திற்கு வந்ததாம். அதன்படி காதல் கோட்டையில் தேவயானி நடிக்க முழுக் காரணம் அஜீத் தானாம். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் பல தேவயானி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். மேலும் சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தினார். தனது சினிமா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அஜீத் தான் என தேவயானியே பேட்டிகளில் கூறியதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.