இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் டால்பி பவர் இயர்பட்.. விலை ரூ.2499 மட்டுமே..!

இந்தியாவில் பல நிறுவனங்கள் தற்போது தரமான இயர்பட் உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது boAt நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் டால்பி பவர் இயர்பட் விலை ரூ.2,499 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

boAt தனது முதல் டால்பி-பவர் நெக்பேண்ட் இயர்பட்களான நிர்வானா 525 ANC என்ற சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்களின் விலை ரூ. 2,499 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

boAt நிர்வானா 525 ANC இயர்பட்களில் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் அம்சம் உள்ளது. இதனால் சுற்றுப்புற இரைச்சலை 35dB வரை குறைக்கும். மேலும் இந்த இயர்பட்கள் 10mm டிரைவர்களால் இயக்கப்படுகின்றன என்பதும், 20Hz முதல் 20kHz வரையிலான அதிர்வெண் வரம்பை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

புளூடூத் 5.2 வசதியை பெற்றுள்ள இந்த இயர்பட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். இந்த இயர்பட்களில் உள்ள கூடுதல் சிறப்புகளை தற்போது பார்ப்போம்.

* டால்பியால் இயங்கும் ANC
* 10 மிமீ டிரைவர்கள்
* அதிர்வெண் மறுமொழி வரம்பு 20Hz முதல் 20kHz வரை
* புளூடூத் 5.2 இணைப்பு
* ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள்
* IPX5 வாட்டர் ரெசிஸ்டெண்ட்

boAt Nirvana 525 ANC இயர்பட்கள், மலிவு விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த சாதனமாகும். குறைந்த விலையில் நிறைந்த நெக்பேண்ட் இயர்பட்களைத் தேடும் பயனர்களுக்கு ஒரு தேர்வாக அமையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews