தோல்வியால் துவண்ட பாரதிராஜா… தக்க சமயத்தில் உதவிய எழுத்தாளர்!

எப்போதுமே மனிதன் என்பவன் பிறர் தனக்கு செய்த உதவியை மறக்க கூடாது. அதுபோல உதவி செய்தவர்களுக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக நடந்து கொண்டு அவர்கள் கஷ்டப்படும்போது மறக்காமல் உதவ முன்வர வேண்டும்.

இது நம்மை மேலும் மேலும் வளரச் செய்யும். அப்படி ஒருமுறை எழுத்தாளர் கலைமணியின் வாழ்க்கையிலும் நடந்தது. என்னவென்று பார்ப்போமா…

1983ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான படம் மண்வாசனை. தயாரித்தவர் சித்ரா லெட்சுமணன். இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்தவர் வசனகர்த்தா கலைமணி. 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர்.

இவர் தான் 16 வயதினிலே வசனகர்த்தா. ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு. ஒரு நாய் மட்டும் வளர்க்கல. ஏன்னு சொல்லு. இந்த சப்பாணியைத் தானே வளர்த்துச்சுன்னு அப்பாவியாக கமல் சொல்வார். அந்தக் காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய வசனம் இது. இந்த வசனத்துக்கு சொந்தக்காரரே இவர் தான்.

பாரதிராஜாவின் மூலம் சினிமாவில் வெளிச்சத்திற்கு வந்தவர். அதற்கு கைமாறு செய்யும் காலம் வந்தது. கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், மண்வாசனை, தெற்கத்தி கள்ளன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படங்களில் இவர் தான் வசனகர்த்தா. இந்தப் படங்கள் எல்லாமே ஹிட் தான்.

16 vayathinile
16 vayathinile

இவற்றில் தெற்கத்தி கள்ளன் படத்தை தயாரித்து இயக்கினார். அப்போது மணிவண்ணனுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார்.

முதல்வசந்தம், கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் இயக்குனர் மணிவண்ணன் தான். இவற்றில் முதல் வசந்தம் படத்துக்கு கதை, வசனம், தயாரிப்பு கலைமணி. கோபுரங்கள் சாய்வதில்லை படத்தைத் தயாரித்தவர் கலைமணி. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படத்தை இயக்கியவர் மனோபாலா. கதை எழுதியவர் கலைமணி.

இதையும் படிங்க… தலைவர் 171 கதை இதுதானா?.. டபுள் ஆக்‌ஷனில் தெறிக்கவிடப் போகும் ரஜினிகாந்த்!.. லோகி சம்பவம் லோடிங்!

அப்போது பாரதிராஜாவுக்கு நிழல்கள், காதல் ஓவியம், வாலிபமே வா வா என வரிசையாகத் தோல்விப்படங்கள். உடனே கலைமணி இதைக் கண்டு பாரதிராஜாவுக்கு உதவ முன்வந்தார். சித்ரா லெட்சுமணன் என்ற பிஆர்ஓவை தயாரிப்பாளர் ஆக்கினார்.

மண்வாசனை என்ற படத்தைக் கொடுத்து பாரதிராஜாவுக்கு கம்பேக் கொடுத்தார். கலைமணியைப் பொருத்த வரை அவரது கதைகளும், வசனங்களும் எப்போதும் நம் நெஞ்சை வருடுவது போல இருக்கும். அதுதான் அவரது படங்களின் வெற்றிக்கு அஸ்திவாரம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...