தலைவர் 171 கதை இதுதானா?.. டபுள் ஆக்‌ஷனில் தெறிக்கவிடப் போகும் ரஜினிகாந்த்!.. லோகி சம்பவம் லோடிங்!

தலைவர் 171 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், தமிழ் சினிமா முழுவதும் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்த இனிமேல் பாடல் ஆல்பம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அப்படியே ரூட் மாறி தற்போது தலைவர் 171 வது படத்தின் பேச்சுகள் அடிப்படத் தொடங்கியுள்ளன.

தலைவர் 171 கதை இதுவா?

ரஜினிகாந்த் செம யங்காக டெனிம் ஷர்ட் அணிந்து கொண்டு கையில் வாசிகளால் ஆன சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இது எந்த மாதிரியான படம் என்று புரியவில்லையே பாஸ் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ரோலக்ஸ் தந்தை டீலக்ஸ் தான் ரஜினிகாந்த் அன்று இந்தப் படத்தையும் எல்சியூ கனெக்ட்டில் கொண்டு வந்துவிட்டனர். ஏற்கனவே தலைவர் 171 வது படம் தனி படமாகவே உருவாக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் உறுதி அளித்துள்ள நிலையில் நிச்சயம் எல்சியூ கதையாக இந்த படம் வராது என்றும் ரோலக்ஸ் எனும் படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் இயக்குவார் என்றும் கூறுகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் கண்ணாடிகள் தெரியும் வாட்சிக்குள் கேள்விக்குறி இருக்கும் நிலையில் அது எதைக் குறிக்கிறது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ரஜினிகாந்த் படம் முழுக்கவே இதயத்துக்குள் வருவாரா? என்கிற கேள்விக்கு இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டபுள் ஆக்‌ஷனில் தான் மிரட்டப் போவது உறுதி என்றும் ஹீரோவும் அவரே வில்லனும் அவரே இதுவரை ரஜினியை ரசிகர்கள் காட்டாத அளவுக்கு ஒரு வில்லத்தனத்தில் லோகேஷ் கனகராஜ் காட்ட உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

டபுள் ஆக்‌ஷனில் தலைவர்:

முதலில் வெளியாகியுள்ள இந்த லுக் வில்லன் ரஜினிகாந்தின் லுக் என்றும் இன்னொரு வயதான தோற்றத்தில் ரஜினிகாந்த் இந்த கோல்ட் ஸ்மக்லிங் கேங்கை பிடிக்க வருவார் என்றும் இதுதான் தலைவர் 171வது படத்தின் கதை என்றும் இப்போதே பல யூகங்கள் கிளம்பியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் படத்தின் ஸ்கிரிப்ட்டை முடித்து விட்டாரா என்று தெரியவில்லை? அதற்குள் இப்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைத்து ஏகப்பட்ட டிகோடிங் இதைப் பெற்று வருவது வேடிக்கையாகத்தான் இருந்தாலும் இப்படி எல்லாம் ரசிகர்கள் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் படத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...