சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்.. நடிக்க வந்து 30 வருஷம் ஆகியும் இன்னும் இளமையாக இருக்கும் நடிகை..

Actress Pragathi : சினிமாவில் சிலருக்கான அறிமுகம் அருமையாக கிடைத்தாலும் அதன் பின்னர் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதில் பலரும் சிரமப்படுவார்கள். ஆனால், சிறந்த படத்தில் நடிகையாக அறிமுகம் கிடைத்ததுடன் மட்டுமில்லாமல் அதனை இன்று வரை தக்க வைத்துக் கொண்டு வருகிறார் பிரபல நடிகை பிரகதி.

இவர் பாக்யராஜ் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜயகாந்த் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து பெயர் எடுத்தவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என இளம் வயதிலேயே ஆசையுடன் இருந்த பிரகதி, முதலில் மைசூர் சில்க் பேலஸ் என்ற ஜவுளிக்கடையின் மாடலாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1993 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் பிரகதி அறிமுகமான நிலையில் அவருக்கு இரண்டாவது படம் பாக்யராஜின் ’வீட்டுல விசேஷங்க’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த அறிமுகத்தில் நாயகியாக நடித்த அவர் படத்தின் வெற்றி காரணமாக நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

pragathi1

’வீட்ல விசேஷங்க’ படத்தை அடுத்து பிரகதி ’பெரிய மருது’ என்ற திரைப்படத்தில் நடித்தார். விஜயகாந்த் ஜோடியாக ரஞ்சிதா நடித்த இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரகதி நடித்தார். அவருடைய கேரக்டர் தான் இந்த படத்தின் கதைக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இருப்பினும் இந்த இரண்டு படங்களை அடுத்து அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வெற்றி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

’பாண்டியனின் ராஜ்யத்திலே’ ’சும்மா இருங்க மச்சான்’ ’வாழ்க ஜனநாயகம்’ ’புதல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜெயம் ரவி நடித்த முதல் திரைப்படமான ’ஜெயம்’ என்ற திரைப்படத்தில் நாயகி சதாவின் அம்மாவாக நடித்திருந்தார் பிரகதி. இதனை அடுத்து சிம்புவின் ’சிலம்பாட்டம்’ திரைப்படத்தில் பிரபு ஜோடியாகவும் நடித்திருந்தார். தமிழ் திரை உலகில் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே இவர் அம்மா, அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடிக்க வந்தது துரதிஷ்டமாக கருதப்பட்டது.

pragathi

கடந்த ஆண்டு வெளியான பிரபுதேவாவின் ’பாகீரா’ என்ற திரைப்படத்தில் கூட பிரகதி, பிரபுதேவாவின் அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை பிரகதி, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். அதன் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பெண், வம்சம் ஆகிய சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியல்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கு மற்றும் மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டு முறை அவர் நந்தி விருதை பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் பெரிய அளவிலான வேடங்கள் பிரகதிக்கு கிடைக்கவில்லை என்ற போதிலும் தற்போது திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் நடித்து வருகிறார். இதே போல, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவரின் புகைப்படங்களும் கூட இணையத்தில் அதிகம் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews