பாரிஸில் இருந்து போன் போட்ட பூர்ணிமா.. பாக்யராஜ் – பூர்ணிமாவின் காதல் கதை..!

நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஜெயராம் காதல் மற்றும் திருமண கதை மிகவும் சுவராசியமானது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

இயக்குனர் பாக்யராஜ் உச்சத்தில் இருந்தபோது ஒரு நாள் அவரை பார்த்து வாய்ப்பு கேட்க வேண்டும் என்று பூர்ணிமா ஜெயராமன் வந்திருந்தார். பாக்யராஜை பார்த்தவுடன் அவர் ஆங்கிலத்தில் படபடவென பேச, ஓகே சி யூ என்று இரண்டே வார்த்தைகளில் முடித்துவிட்டு பாக்யராஜ் சென்றுவிட்டார்.

முதல் சந்திப்பிலேயே பாக்யராஜ் மீது பூர்ணிமாவுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. ரொம்ப திமிர் பிடித்த ஆள் போல என்று எண்ணி அதன் பிறகு அவரை மறந்து விட்டார்.

bhagyaraj and poornima3

இந்த நிலையில்தான் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற திரைப்படத்திற்காக நாயகி தேடும் பணியில் பாக்யராஜ் இருந்தார். அப்போது தன்னை வந்து சந்தித்த பூர்ணிமா என்ற பெண் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை வரவழைத்தார். அப்போது அவரிடம் கதை கூறி ஒப்புதல் வாங்கிய போது ‘முதல் சந்திப்பில் ஏன் நீங்கள் அவ்வாறு செய்தீர்கள்?’ என்று பூர்ணிமா கேட்க, ‘நீங்கள் பேசிய ஆங்கிலம் எனக்கு புரியவில்லை, அதனால் தான் உங்களை தவிர்ப்பதற்காக அப்படி சொன்னேன்’ என்று பாக்யராஜ் சொல்ல பூர்ணிமா சிரித்தார்.

அந்த நிலையில் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பாக்யராஜ் பூர்ணிமாயிடையே ஒரு இயக்குனர் ஒரு நடிகை என்ற உறவு மட்டுமே இருந்தது. காதல் எதுவும் இல்லை. ஏனெனில் அப்போது பிரவீனா உயிரோடு இருந்தார்.

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படப்பிடிப்பின் போது அவ்வப்போது பாக்யராஜ் வீட்டுக்கு பூர்ணிமா வருவார். அப்போது பூர்ணிமா மற்றும் பிரவீனா ஆகிய இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. குறிப்பாக பாக்யராஜ் – பிரவீனா திருமண நாள்தான் பூர்ணிமாவின் பிறந்தநாள் என்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள்.

bhagyaraj and poornima2

இந்த நிலையில்தான் திடீரென பிரவீனா உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு பாக்யராஜை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து அவர் மன நிம்மதிக்காக கோவாவுக்கு சென்று நிம்மதியாக இருக்க தொடங்கினார்.

பாக்யராஜின் ஒரே அண்ணன் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அவருக்கு பிரவீனாவை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் கடிவாளம் இல்லாமல் நமது வாழ்க்கை இருந்தால் ஒரு கட்டத்தில் பாதை மாறி சென்று விடும் என்று பயப்பட ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இந்த நிலையில் தான் மும்பைக்கு ஒருமுறை பாக்யராஜ் சென்றிருக்கும்போது பூர்ணிமாவை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவருடைய எளிமை பிடித்து விட்டதால் தனது திருமண எண்ணத்தை கூறலாமா என்று முடிவு செய்தார். ஆனால் பூர்ணிமா அப்போது மறுநாள் தான் பாரிஸூக்கு ஒரு படத்தின் படப்பிடிப்புற்கு செல்வதாக கூறினார். இதனை அடுத்து பாரிஸ் சென்றதும் எனக்கு போன் செய்யுங்கள் என்று பாக்யராஜ் சொன்னார்.

இந்த நிலையில் பாரிஸில் இருந்து பலமுறை பூர்ணிமா போன் செய்த போதும் பாக்யராஜ் போன் எடுக்கவில்லை, அவருடைய உதவியாளர் போனை எடுத்து பாரிஸ் கார்னரில் இருந்து ஒரு ரசிகை பேசுகிறார் என்று நினைத்து டைரக்டர் பிஸியாக இருக்கிறார் என்று கூறி வைத்து விட்டாராம்.

அதன் பிறகு உண்மை தெரிந்து பாக்யராஜ் அந்த உதவியாளரை திட்டியதாகவும், அதன் பின் போன் அருகிலேயே இருந்து எப்போது ஃபோன் வரும் என காத்திருந்ததாகவும் தெரிகிறது. மறுநாள் போன் வர அவர்கள் பேசியபோதுதான் தனது காதலை ப்ரபோஸ் செய்துள்ளார் பாக்யராஜ். அப்போது பூர்ணிமா தனது அம்மாவிடம் பேசுங்கள் என்று கூறினார்.

bhagyaraj and poornima1

இதனையடுத்து பாக்யராஜ், பூர்ணிமாவின் அம்மாவிடம் பேச அதன்பின் பூர்ணிமாவின் அப்பா, தாத்தா அவர்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடம் சம்மதம் பெற்று அதன் பிறகுதான் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பூர்ணிமாவும் பாக்யராஜை உள்ளுக்குள் காதலித்து உள்ளார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. அதனால் தான் அவர் பாரீஸில் இருந்து அத்தனை முறை பேசியுள்ளார். தனது காதல் நிறைவேறினால் பாரிஸில் தான் ஹனிமூன் என்றும் மனதுக்குள் முடிவு செய்தாராம்.

ஆனாலும் திருமணத்திற்கு பின்னர் பாக்யராஜ் பிஸியாக இருந்ததால் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்ததாலும் ஹனிமூன் செல்ல முடியவில்லை. இருப்பினும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தோடு இரண்டு குழந்தைகளுடன் பாக்யராஜ் பாரிஸ்க்கு சென்றார் என்றும் அங்கு சில நாட்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...