இந்திய ஐபோன் பயனர்களுக்கு BGMI கேம்.. எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும்.

Battlegrounds Mobile India என்று கூறப்படும் BGMI கேம் இப்போது இந்தியாவில் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது. கேம் ஆப் ஸ்டோரில் மே 29 முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BGMI என்பது பிரபலமான போர் ராயல் கேம் என்பதும், இந்த கேம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. இருப்பினும், கேமின் டெவலப்பரான கிராஃப்டன், இந்திய விதிமுறைகளுக்கு இணங்க சில மாற்றங்களை செய்ததால் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.

BGMI என்பது இலவசமாக விளையாடக்கூடிய கேம் ஆக இருந்தாலும், பயன்பாட்டில் சில செலவுகளும் உள்ளன. விளையாடும்போது சில வசதிகளை பெறுவதற்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

நீங்கள் இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த புதிய கேமை விளையாட முடிவு செய்தீர்கள் என்றால் இந்த கேமை எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

1. உங்கள் ஐபோனில் ஆப் ஸ்டோரைத் திறக்கவும்.
2. “Battlegrounds Mobile India” என்று தேடவும்.
3. “Get” பொத்தானைத் தட்டவும்.
4. உங்கள் ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்யவும்
5. “உள்நுழை” பொத்தானைத் தட்டவும்.
6. விளையாட்டு டவுன்லோடு ஆகும்.
7. கேம் டவுன்லோடு செய்யப்பட்டவுடன், அதை ஓப்பன் செய்து உங்கள் பழைய கணக்கில் உள்நுழையலாம், அல்லது புதிய கணக்கை தொடங்கலாம்.

உங்கள் பழைய கணக்கு விவரங்களை மறந்துவிட்டால், உதவிக்கு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்.

இந்த கேம் விளையாடும் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:

* 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கேம் கிடைக்கும்.
* கேமிற்கு குறைந்தபட்சம் 2ஜிபி இலவச சேமிப்பிடம் தேவை.
* எல்லா சாதனங்களிலும் கேம் வேலை செய்யாமல் போகலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews