PDF ஃபைல்களை டவுன்லோடு செய்யும் முன் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.. இல்லையெனில் பெரும் ஆபத்து..!

ஒரு ஸ்மார்ட்போனில் அல்லது கம்ப்யூட்டரில் PDFபைலை டவுன்லோட் செய்து ஓபன் பண்ணும் முன் சில முக்கிய விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஒரு சில PDFபைல்களில் மால்வேர் அடங்கியிருக்கும் என்றும் அதை தெரியாமல் நாம் சேர்ந்து டவுன்லோட் செய்து விட்டால் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே PDF ஃபைல்களை டவுன்லோட் செய்யும் முன் இந்த முக்கிய விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

முதலில் நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே PDFபைல்களை டவுன்லோட் செய்ய வேண்டும். புகழ்பெற்ற இணையதளங்கள், நம்பத் தகுந்த இணையதளங்களில் உள்ள PDFபைல்களை மட்டுமே டவுன்லோட் செய்யவும். ஒருவேளை உங்களுக்கு நம்பத்தகுந்த இணையதளம் இல்லை என்று சந்தேகம் இருந்தால் டவுன்லோட் செய்வதை தவிர்ப்பது நல்லது

டவுன்லோட் செய்த பின் PDFகளை ஸ்கேன் செய்ய வேண்டும். PDFபைல்களில் சில தீங்கிழைக்கும் குறியீடுகள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைன் உள்ள இலவச மற்றும் கட்டண வைரஸ் தடுப்பு ஸ்கேன் செயலிகளை பயன்படுத்தி ஸ்கேன் செய்த பின்னரே PDFபைல்களை திறக்க வேண்டும்
உங்கள் போனில் ஆபரேட்டிங் சிஸ்டம் அவ்வப்போது புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட மென்பொருள்கள் தான் தவறான தீங்கிழைக்கக்கூடிய PDFபயல்களை டவுன்லோட் செய்வதை தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கதிர். உங்கள் மொபைலை மால்வேரிலிருந்து பாதுகாக்க கண்டிப்பாக புதுப்பிக்கப்பட்ட அப்டேட்களை வைத்திருக்க வேண்டும்.

ஃபயர்வால் மற்றும் விபிஎண்ணை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஆன்லைன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்பதும் ஹேக்கர்களுக்கு உங்கள் தகவல்களை திருட கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மால்வேர்கள் அடங்கிய PDFகள் பெரும்பாலும் இணைப்புகளை கொண்டிருக்கும். அந்த இணைப்புகளை கிளிக் செய்யும் போது உங்கள் தொலைபேசியில் உள்ள டேட்டாக்களும் பறிபோக வாய்ப்புள்ளது. எனவே நம்பகமான இடத்தில் இருந்து வந்ததாக தோன்றினாலும் இணைப்புகளை கிளிக் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

PDF பைல்களை டவுன்லோட் செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டிய சில கூடுதல் உதவி குறிப்புகள் இதோ:

* தெரியாத நபர்களிடம் இருந்து PDF ஃபைல்கள் பெற்றால், அதைத் திறக்க வேண்டாம்.

* PDF ஃபைல்கள் பாதுகாப்பானதா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், இலவச ஆன்லைன் வைரஸ் ஸ்கேனர் மூலம் அதை ஸ்கேன் செய்யலாம்.

* சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகளுடன் உங்கள் PDF ரீடரை புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.

* உங்கள் PDF கோப்புகளைப் பாதுகாக்க வலுவான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

* PDF பைல்களில் நீங்கள் என்ன தகவலை பதிவு செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும்.

* PDF ஃபைல்களில் உள்ள எந்த இணைப்புகளும் பாதுகாப்பானவை என்று நீங்கள் உறுதியாக நம்பும் வரை கிளிக் செய்ய வேண்டாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews