ரூ.40,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா? இந்த மாடல்களை பரிசீலனை செய்யவும்..!

நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் ஏராளமான ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் கொட்டி கிடக்கும் நிலையில் நாம்தான் சிறந்த ஒன்றை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க முடிவு செய்திருந்தால் கீழ்க்கண்ட மாடல்களை பரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது.

1. OnePlus 11R 5G: இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999 என்ற விலையில் கிடைக்கும். ஃபிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 செயலி, 100W சார்ஜிங் மற்றும் ஒன்பிளஸ் 11 5G அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் 6.74-இன்ச் டிஸ்ப்ளே, 16ஜிபி வரை ரேம் ஆகிய அம்சங்களும் உண்டு. கேமிங் விளையாட, இண்டர்நெட் பயன்பாட்டிற்கு ஒரு சிறந்த போன்.

2. Realme 11 Pro+ 5G: இந்த ஸ்மார்ட்போன் ரூ. 40,000க்குள் புதிய போனை தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வு. பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு, அதிவேக காட்சி மற்றும் நம்பகமான செயல்திறன், மல்டிமீடியா மற்றும் கேமிங் விளையாட சிறப்பான போன், எவ்வளவு பயன்படுத்தினாலும் ஒரு முழு நாள் சார்ஜ் இருக்கும் என்பது கூடுதல் வசதி.

3. Vivo V27 Pro 5G: இந்த ஸ்மார்ட்போனும் இந்தியாவில் ரூ. 40,000 க்கு கீழ் கிடைக்கிறது. அதன் நேர்த்தியான வடிவமைப்பு, சிறப்பான கேமரா அமைப்பு இதன் சிறப்பு ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கர்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

4. Samsung Galaxy A54 5G: இந்த ஸ்மார்ட்போன் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்பட்டுள்ளது. 50MP முதன்மை கேமராவுடன் டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 32MP முன் செல்பி கேமிரா மூலம் வீடியோ கால் செய்யலாம். 4K வீடியோ பதிவை ஆதரிக்கும் மிக சில ஸ்மார்ட்போன்களில் ஒன்று. 5,000mAh பேட்டரியுடன் இந்த போன் சந்தையில் கிடைக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...