ரூ.15,000 – ரூ.60,000ல் ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா? இதோ ஒரு பார்வை..!

ஸ்மார்ட் போன் என்பது தற்போது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் ரூ.60,000 வரை எந்த ஸ்மார்ட் ஃபோனை வாங்கினால் நல்லது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

15,000 ரூபாய்க்குள் சிறந்த போன் வாங்க விரும்பினால் உங்களது தேர்வு நிச்சயமாக Samsung Galaxy M14 5G என்ற ஸ்மார்ட் போன் தான். Galaxy M13 5G, Samsung Galaxy M14 5G ஆகிய மாடல்கள் சிறந்த ரூ. 15,000 ஸ்மார்ட்போனாக உள்ளது.

25,000 ரூபாய்க்குள் சிறந்த போன் நீங்கள் வாங்க விரும்பினால் கண்டிப்பாக POCO X5 PRO 5G என்றா மாடலுக்கு செல்லலாம். இதில் 108MP ப்ரைமரி ரியர் கேமரா மற்றும் சக்திவாய்ந்த Snapdragon 778G SoC பிராஸசர், உறுதியான செயல்திறன் ஆகியவை கொண்டது. மேலும் 5,000mAh பேட்டரி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

40,000 ரூபாய்க்குள் சிறந்த போன் வாங்க விரும்பினால் உங்களது தேர்வு OnePlus 11R 5G தான். ரூ.39,999 என்ற விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 பிராஸசர், ஒளிரும்-வேகமான 100W சார்ஜிங் மற்றும் ஒன்பிளஸ் 11 5G தரத்துடன் அமைந்துள்ளது. மேலும் 6.74-இன்ச் டிஸ்ப்ளே, 16ஜிபி வரை ரேம் ஆகிய அம்சங்களும் உள்ளன.

60,000 ரூபாய்க்குள் சிறந்த போன் நீங்கள் வாங்க விரும்பினால் OnePlus 11 5G என்பது சரியான தேர்வாக இருக்கும். இந்த ஃபோன் இந்தியாவில் ரூ. 56,999 விலையில் கிடைக்கிறது. ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சிறந்த கேமிரா, 5,000mAh பேட்டரி, 120Hz AMOLED டிஸ்ப்ளே, Snapdragon 8 Gen 2 செயலியுடன் கிடைக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews