பிளஸ் 2வில் 90% மதிப்பெண் இல்லை என்றால் வீடு வாடகைக்கு இல்லை.. பெங்களூரு ஹவுஸ் ஓனரின் வித்தியாசமான நிபந்தனை..!

பிளஸ் டூ தேர்வில் 90% மதிப்பெண் இல்லை என்றால் வாடகைக்கு வீடு இல்லை என்று ஹவுஸ் ஓனர் ஒருவர் நிபந்தனை விதித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயரலாம் என்றும் நல்ல கல்லூரியில் படித்து நல்ல வேலைக்கு செல்லலாம் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் பிளஸ் டூ தேர்வில் 90% மதிப்பெண் எடுத்தால் தான் வீடு வாடகைக்கு கிடைக்கும் என்பது முதல் முறையாக நெட்டிசன்கல் பலர் கேள்விப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் வாடகைக்கு புரோக்கர் இடம் வீடு கேட்டிருந்ததாகவும் அவர் தனது ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண்களை பெற்றுச் சென்ற நிலையில் தனது பிளஸ் டூ மதிப்பெண் 76 சதவீதம் இருந்ததால் வாடகைக்கு வீடு இல்லை என ஹவுஸ் ஓனர் கூறிவிட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

rent house

பெங்களூரை சேர்ந்த அந்த ஹவுஸ் ஓனர் குறைந்தது 90%, +2 தேர்வில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடுவேன் என்று கூறியதாக புரோக்கர் தெரிவித்துள்ளார் . இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சமூக வலைதள பயனாளிகள் தங்களது கருத்தை காமெடியாக பதிவு செய்து வருகின்றனர்.

பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் எடுப்பது உங்கள் வாழ்க்கையில் உயர உதவி செய்யுமோ இல்லையோ கண்டிப்பாக வீடு வாடகைக்கு கிடைக்க உதவி செய்யும் என நக்கலாக பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இந்த தகவலை தாங்கள் நம்பவில்லை என்றும் எங்களுக்கு தெரிந்து எந்த ஹவுஸ் ஓனரும் இது மாதிரி நிபந்தனை விதித்ததில்லை என்று கூறி வருகின்றனர். மொத்தத்தில் இந்த சமூக வலைதள பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.