உங்கள் கணவர் படத்தில் நடிக்க மாட்டேன்…. எம்ஜிஆர் மனைவிக்கு கடிதம் எழுதிய பானுமதி…. என்ன காரணம்….?

இப்போது அஜித், விஜய் உடன் அனைத்து நடிகைகளும் நடிக்க ஆசைப்படுவது போல் அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் விரும்புவது உண்டு. ஆனால் பானுமதி மட்டும் எம்ஜிஆர் உடன் நடிக்க மாட்டேன் என்று அவருடைய மனைவிக்கு கடிதம் எழுதி, வாங்கிய செக் பணத்தை திருப்பி அனுப்பிய சம்பவம் ஆச்சரியமான ஒன்று.

நாடோடி மன்னன் 

எம்ஜிஆர் நடித்து, இயக்கிய திரைப்படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் எம்ஜிஆர் இயக்குனராக இருந்ததால் பானுமதிக்கு சில அசெளகரியங்கள் இருந்தன. எடுத்த காட்சியை அவர் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருந்ததாக பானுமதி ஆவேசப்பட்டார். ஒரு கட்டத்தில் உங்களுக்கு படம் இயக்க தெரியவில்லை என்றால் வேறு நல்ல இயக்குனரிடம் படத்தை கொடுத்துவிடுங்கள்.

விஜய்யின் அம்மா ஒரு பெரிய டைரக்டரா? விஜய்யின் முதல் படத்திற்கு மட்டும் இல்லாமல் 13 படத்திற்க்கு கதை எழுதிய சோபா சந்திரசேகர்!

banumathi1

என்னால் திரும்பத் திரும்ப ஒரே காட்சிகளில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனாலும் எம்ஜிஆர் கோபப்படாமல் பானுமதி திறமைக்கு மரியாதை கொடுத்து தொடர்ந்து அமைதியாக இருந்துள்ளார். இந்த நிலையில்  ஒரு கட்டத்தில் தான் கொடுத்த கால்ஷீட் முடிந்துவிட்டது என்றும் இனி டைரக்டரை மாற்றினால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கலாம் எம்ஜிஆர் தொடர்ந்து இயக்குவதாக இருந்தால் நடிக்க மாட்டேன் என்றும்  பானுமதி கூறியுள்ளார்.

எம்ஜிஆர் மனைவிக்கு கடிதம்  

அதற்கு எம்ஜிஆர் “நான் தான் படத்தை இயக்குவேன், நீங்கள் நடிக்க இஷ்டம் இருந்தால் நடியுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் தாராளமாக படத்தை விட்டு வெளியேறலாம்” என்று உறுதியாக கூறியுள்ளார். இதனால் அந்த படத்தில் இருந்து வெளியேறிய பானுமதி, நாடோடி மன்னன் படத்தில் நடிக்க மாட்டேன் என எம்ஜிஆரின் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

பணத்தை விட நட்பு முக்கியம்….. சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி…. எந்த படம் தெரியுமா….?

nadodi mannan

அதில் “உங்கள் கணவரின் படத்தில் நடிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்காக வருந்துகிறேன். செக்கையும் நான் திரும்ப அனுப்பி உள்ளேன் ஏற்றுக் கொள்ளுங்கள் மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து தான் பானுமதியின் கேரக்டர் இடைவேளைக்கு முன்பே இறந்து விடுவது போல அந்த படத்தில் எம்ஜிஆர் காட்சியை வைத்திருந்தார்.

அதில் கூட அந்த காட்சியை ஒரு மான் அம்பு தாக்கி செத்து விடுவது போன்ற கவிதையாக அந்த காட்சியை காண்பித்திருப்பார். படத்தின் இரண்டாம் பாதியில் சரோஜாதேவி நாயகியாக நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பானுமதியின் காட்சி எல்லாம் படத்தில் இருந்து தூக்கப்பட்டு இருக்கும் என்றுதான் பலர் நினைத்தார்கள்.

பானுமதியை புகழ்ந்த எம்ஜிஆர்  

ஆனால் பானுமதி காட்சியை எடுத்தவரை அனைத்தையுமே படத்தில் எம்ஜிஆர் வைத்திருந்தார். அதுமட்டுமின்றி படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்த படத்தின் வெற்றிக்கு பானுமதியின் நடிப்பு ஒரு மிகப்பெரிய காரணம் என்றும் எம்ஜிஆர் பெருந்தன்மையுடன் கூறியிருந்தார். அறிஞர் அண்ணாவின் முன்னிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நடந்த போது கூட பானுமதி குறித்து அவர் பெருமையாக பேசினார்.

முதல் படம் ரிலீஸ் ஆகல….. 2வது படத்தில் ஹீரோயினிடம் வாங்கிய அறை…. எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை….!!

நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு ஏற்கனவே ஒப்புக்கொண்டதால் ராஜா தேசிங்கு மற்றும் கலை அரசி ஆகிய படங்களில் எம்ஜிஆருடன் பானுமதி இணைந்து நடித்தார். அதன் பிறகு அவர் எம்ஜிஆருடன் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews