தக் லைஃப் படத்தில் இணைந்த மற்றும் ஒரு ஹேண்ட்ஸமான நடிகர்! எல்லாம் மனைவி வந்த நேரம்

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் தக் லைஃப் திரைப்படம். படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். கிட்டத்தட்ட 30 வருடத்திற்கு பிறகு கமலும் மணிரத்தினமும் இந்த படத்தில் தான் மீண்டும் கூட்டணி வைக்கிறார்கள்.

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே நாயகன் என்ற திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்தக் வெற்றி கூட்டணி தொடருமா என்பதனை தக் லைஃப் படத்தின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

ஆரம்பத்தில் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. ஆனால் துல்கர் சல்மான் திடீரென படத்தில் இருந்து விலக சிம்பு இந்த படத்தில் இணைந்தார். சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிம்பு இந்த படத்தில் வந்ததால் ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகினார். சுஹாசினி பல முறை சொல்லியும் ஜெயம் ரவி படத்தில் நடிக்க முடியாது என சொல்லி விட்டாராம்.அதனால் அவருக்கு பதில் இப்போது மற்றும் ஒரு சூப்பரான நடிகர் உள்ளே வந்திருப்பதாக செய்திகள் கூறப்படுகிறது.

அவர் வேறு யாருமில்லை. நடிகர் அசோக் செல்வன் என்று சொல்லப்படுகிறது. கூடிய சீக்கிரம் அவர் இந்த படத்தில் இணைய இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் ஓரு பேச்சு அடிபடுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...