விஜயுடன் சேர்ந்து பயணிப்பீங்களா? யோசிச்சு என்ன பதில் சொன்னாரு தெரியுமா லாரன்ஸ்?

தமிழ் சினிமாவில் இப்போது டாப் நடிகராக இருந்து அடுத்ததாக அரசியலை நோக்கி பயணிக்க தயாராக இருப்பவர் நடிகர் விஜய். விஜயை பொருத்தவரைக்கும் அவர் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்தது தான் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது. கிட்டத்தட்ட இன்றைய தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய முதல் நடிகராக விஜய் இருக்கிறார்.

அந்த சம்பளத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் பொதுவாழ்வு முக்கியமானது என்பதை மனதில் வைத்துக்கொண்டு மக்களுக்காக சேவை செய்ய இப்போது அரசியலை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து வருகிறார் விஜய்.

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கு விஜய் அதற்கு முன்பாக தான் ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார்.இந்த நிலையில் இன்னொரு பக்கம் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் லாரன்ஸ் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இன்று விவசாயிகளுக்காக லாரி நிறைய டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ட்ராக்டர்களை இலவசமாக கொடுத்திருக்கிறார்.

மேலும் மாற்றம் என்ற பெயரில் புதிய சேவை ஒன்றை நிறுவி அதன் மூலம் யார் யாருக்கெல்லாம் உதவிகள் தேவைப்படுகிறதோ அந்த உதவிகளை செய்ய காத்திருக்கிறேன் என லாரன்ஸ் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அவரிடம் இன்று பத்திரிகையாளர்கள் ‘நண்பர் விஜயின் அரசியல் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ எனக் கேட்டபோது அதற்கு பதில் அளித்த லாரன்ஸ் அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என கூறினார்.

விஜயுடன் சேர்ந்து பயணிப்பீர்களா என கேட்டதற்கு நான் சேவை செய்ய மட்டுமே இங்கு வந்திருக்கிறேன் என்று கூற விஜய் மாதிரியே இந்த ஆண்டு இப்போது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு சலுகைகள் ஏதும் கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு ‘பார்த்து பண்ணிக்கலாம் அண்ணே’ என சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...