மிகச்சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்.. ASUS ROG 5s சிறப்பம்சங்கள்..!

ஒரு சில ஸ்மார்ட்போன்கள் வெளியாகி ஒன்று அல்லது இரண்டு வருடம் ஆனாலும் பயனர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் என்பது தெரிந்தது. அந்த வகையில் ஆசஸ் நிறுவனம் வெளியிட்ட மிகச்சிறந்த கேமிங் ஸ்மார்ட் ஃபோன்களில் ஒன்றான ASUS ROG 5s என்ற போன் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

ASUS ROG 5s ஸ்மார்ட்போன் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான நிலையில் இதுவொரு மிகச்சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ஆக கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 888+ 5G பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 144Hz அம்சத்துடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம், 128ஜிபி அல்லது 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. மேலும் இதில் 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்.

ASUS ROG 5s இந்தியாவில் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.49,999 என்ற விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.57,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

ASUS ROG Phone 5s இன் சில முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே:

* 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* Qualcomm Snapdragon 888+ 5G பிராஸசர்
* 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம்
* 128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ்
* 6000mAh பேட்டரி
* 64MP பின்புற கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா
* 24MP செல்பி கேமிரா
* ஆண்ட்ராய்டு 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ASUS ROG 5s ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான ஸ்மார்ட்ஃபோனைத் தேடும் கேமிங் பிரியர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். வேகமான ப்ராசஸர், பெரிய டிஸ்பிளே மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் நிச்சயம் இதுவொரு நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews