தள்ளுபடி விலையில் ஆப்பிள் ஐபோன் 14.. அமேசானின் அதிரடி சலுகை..!

ஆப்பிள் ஐபோன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த போனை அமேசான் தனது சமூக வலைதளத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகிய இரண்டு மாடல்களும் சுமார் 15 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அமேசான் அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய ஐபோனை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அமேசான் தற்போது அதிரடி சலுகையாக ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உள்ளிட்ட ஆப்பிள் தயாரிப்புகளிம் சலுகை விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 சல் விலைரூ. 79,999 என்ற நிலையில் தற்போது இந்த போன் 15% தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 67,999 என்ற விலையில் கிடைக்கின்றது. அதேபோல் ஐபோன் 14 பிளஸ் அசல் விலை ரூ. 89,900 என்ற நிலையில் தற்போது 13% தள்ளுபடி செய்யப்பட்டு தள்ளுபடிரூ.77,999 விலையிலும் கிடைக்கிறது. இந்த சலுகை ஜூன் 17 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது,.

தள்ளுபடிகள் பற்றிய விவரங்கள் இங்கே:

* ஐபோன் 14: ரூ. 67,999 (15% தள்ளுபடி)
* ஐபோன் 14 பிளஸ்: ரூ. 77,999 (13% தள்ளுபடி)

தள்ளுபடி செய்யப்பட்ட ஐபோனை வாங்க, அமேசான் இணையதளத்திற்குச் சென்று ஐபோன் 14 அல்லது ஐபோன் 14 பிளஸ் என்று தேடினால் தள்ளுபடி விலை குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை நீங்கள் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் இரண்டும் சிறந்த ஸ்மார்ட்போன்கள். அவை சக்திவாய்ந்த A16 பயோனிக் செயலிகள், அழகான OLED காட்சிகள் மற்றும் சிறந்த கேமராக்களைக் கொண்டுள்ளன. நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், ஐபோன் 14 அல்லது ஐபோன் 14 பிளஸ் ஒரு சிறந்த தேர்வாகும். தற்போதைய தள்ளுபடி விலையை பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews